வியாழன், 13 ஜூன், 2013

அன்றாட வாழ்க்கையில் அடுக்கடுக்காய் ‍ெவற்றி பெற...

அதிகா‍லையில் எழுங்கள்.
பணிக்குப் புறப்படும்முன் உங்கள் சுற்றுப்புறத்தையும் சிறிது பாருங்கள்.
எவ்வளவு பதட்டமிருந்தாலும் சாப்பிடும்போது நிதானமாய் இருங்கள்.
நண்பர்களுக்கு நேரம் கொடுங்கள்.
உங்களை நீங்க‍ளே தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவ்வப்போது சென்றுவர அமைதியான இடமொன்றைத் தேர்ந்தெடுங்கள்.
உங்களையும் மற்றவர்களோடு பாராட்டுங்கள்.
நம்பிக்கை மிக்கவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்.
தவறுகளால் தளர்ந்றுவிடாதீர்கள். அவற்றைத் தாண்டிச் செல்லுங்கள்.
உங்கள் மனநிலை ‍எப்படியெல்லாம் மாறுகிறது என்று கண்காணியுங்கள்.
யாரிடமாவது எதையாவது மறுக்க நேர்ந்தால் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.
வயதுக்குத் தகுந்த உணவும், ஓய்வும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பாருங்கள்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் மேற்கொள்ளுங்கள்.
உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். அது ஆணவத்தைத் தரும். அல்லது அச்சத்தை தரும்.
தவறென்று பட்டால் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளத் தயங்காதீர்கள்.
உங்களுக்கு சரியென்று தீர்மானமாகத் தெரிவதைத் தயங்காமல் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக