| மற்றவர்களின் தவறுகளை எடை போடுவது சுலபம் | நம்முடைய தவறுகளை அறிந்து கொள்வது கடினம் |
| நினைத்ததையெல்லாம் பேசுவது சுலபம் | நாவைக் கட்டுப்படுத்துவது கடினம் |
| நம்மை நேசிப்பவர்களைக் காயப்படுத்துவது சுலபம் | அந்தக் காயத்தை ஆற்றுவது கடினம் |
| மன்னிப்புக் கேட்பது சுலபம் | மன்னிப்பது கடினம் |
| தூக்கத்தில் கனவு காண்பது சுலபம் | கனவுக்காக விழித்திருந்து போராடுவது கடினம் |
| வெற்றியில் மகிழ்வது சுலபம் | தோல்வியை ஒப்புக்கொள்வது கடினம் |
| தவறி விழுவது சுலபம் | உடனே எழுவது கடினம் |
| வாழ்க்கையைக் கொண்டாடுவது சுலபம் | அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது கடினம் |
| உறுதிமொழி தருவது சுலபம் | உறுதிமொழியைக் காப்பாற்றுவது கடினம் |
| பிறரை விமர்சிப்பது சுலபம் | நம்மைத் திருத்திக் கொள்வது கடினம் |
| தவறுகள் செய்வது சுலபம் | தவறுகளிலிருந்து பாடம் கற்பது கடினம் |
| நட்பை இழப்பது சுலபம் | நல்ல நட்பைப் பெறுவது கடினம் |
| மேம்பாடுபற்றி சிந்திப்பது சுலபம் | சிந்தித்ததை செயல்படுத்துவது கடினம் |
| பிறர்மீது பழிபோடுவது சுலபம் | அவர்கள் கோணத்தில் பார்ப்பது கடினம் |
| பிறரடம் இருந்து பெறுவது சுலபம் | பிறருக்குத் தருவது கடினம் |