சமுக அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுக அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 ஜூன், 2013

நீங்கள் உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள்

+ நீங்கள் உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள் உங்கள் வாழ்க்கை ஒழுங்காகிவிடும்.

+ சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரண்டு கருவிகள்.

+ தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பலனும்தான் வெற்றிக்கான வழிகள்.

+ வாழக்கையின் ஒவ்வொரு அனுபவத்திலும் பாடம் கற்றுக் கொள்பவன்தான் புத்திசாலி.

+ மனிதன் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதைவிட அதனை வாழ்ந்று பார்ப்பதே சிறந்த முயற்சி.

+ முயற்சி செய்யாதவனுக்கு கடவுளும் கூட உதவி செய்யமாட்டார்.

+ நெறுப்பு தங்கத்தைத் தூய்மைப்படுத்துகிறது. கஷ்டங்கள் மனிதனை வலுவுள்ளவனாக மாற்றுகின்றன.

+ உன் அச்சத்தை உன்னுடன் வைத்துக்கொள். ஆனால் ஊக்கத்தை மட்டும் பிறருடன் பகிர்ந்து கொள்.

+ நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி. கவலை வாழ்க்கையின் எதிரி.

+ பிறரிடம் நூறு குறைகளைக் காண்பதைவிட நம்மிடம் இருக்கும் ஒரு குறையையாவது போக்க முயல வேண்டும்.

+ வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.

+ ஒரே சமயத்தில் பல திசைகளில் செல்ல முயற்சி செய்யாதீர்கள்.

+ மற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் நீங்கள் முதல் நபராக இருங்கள்.

+ வாழ்க்கை விலைமிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால், அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது

முதல் வணக்கம்

வாழ்க்கையில் முன்னேற நமக்கு தகுதியும் பதவியும் வேண்டும்.
த - தன்னம்பிக்கை
கு - குறிக்கோள்
தி - திட்டம்
ப - பணிவு
த - தனித்திறன்
வி - விடாமுயற்சி

வாழ்வில் சிலநேரம்...

வாழ்வில் சிலநேரம்  சிலர் எப்போதோ நமக்கு எதிராக நடப்பதுண்டு. ஆனால் அவர்கள் எப்போதும் நமக்கு எதிரிகள் அல்லர்.
சில நேரம், நம்மைக் கால் நீட்டிக் கவிழ்த்தவர்களே நம்மைக் கைகொடுத்து தூக்கி விடுபவர்களாகவும் மாறக்கூடும்.

வாழ்வில் சிலநேரம்  கோபப்படும்படி நேரும். ‍கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குக் ‍கோபப்படும் உரிமை நமக்கு உண்டு. ஆனால், கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குக் கொடூரமாக நடந்துகொள்ள நமக்கு ஒருபோதும் உரிமையில்லை.

வாழ்வில் சிலநேரம்  நம்மேல் அடர்த்தியான அன்பு கொண்டவர்கள் அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். அவர்களின் ‍அன்பும் பிரார்த்தனைகளும் நம் கவசமாக இருப்பது நம் கண்ணுக்குத் தெரியாமலே போகலாம்.

வாழ்வில் சிலநேரம்   நாம் நினைத்தது நடக்காமல் போகலாம். ஆனால், வாழ்வில் நமக்குத் தேவையானது நிச்சயம் நடந்து கொண்டிருக்கிறது. ‍அந்த நன்றியுணர்வு அரும்பினால் வாழ்க்கையின் முழுமையான நன்மைகள் நம் வசமாகும்.

வாழ்வில் சிலநேரம்  உள்ளத்தை நொறுக்கும்படியான சம்பவங்கள் நிகழும். நம் துயரத்திற்காக உலகம் நின்று விடாது என்பதை உணர்ந்தால் நம்முடைய பயணங்கள் தொடரும்.

வாழ்வில் சிலநேரம்  நண்பர்களின் மனநிலைகள் மாறும். இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் நண்பர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை நேரும்.

வாழ்வில் சிலநேரம்   சில ரகசியங்களை அறிந்றுகொள்ள முடியாமலேயே போகும். அவற்றை அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லதாகவே இருக்கும்.

வாழ்வில் சிலநேரம்  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிவரும். தவறினால், அந்த உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கும்.

வாழ்வில் சிலநேரம்  கடுமையான முடிவுகளை எடுக்க நேரும். ‍அந்த முடிவின் அழுத்தத்தை மனதிலிருந்று அகற்றுவதற்கே முதலிடம் தர வேண்டும்.


எது சுலபம்? எது கடினம்?


  BD19827_
மற்றவர்களின் தவறுகளை எடை போடுவது சுலபம்நம்முடைய தவறுகளை ‍அறிந்து கொள்வது கடினம்
நினைத்ததையெல்லாம் பேசுவது சுலபம்நாவைக் கட்டுப்படுத்துவது கடினம்
நம்மை நேசிப்பவர்களைக் காயப்படுத்துவது சுலபம்அந்தக் காயத்தை ஆற்றுவது கடினம்
மன்னிப்புக் கேட்பது சுலபம்மன்னிப்பது கடினம்
தூக்கத்தில் கனவு காண்பது சுலபம்கனவுக்காக விழித்திருந்து போராடுவது கடினம்
‍வெற்றியில் மகிழ்வது சுலபம்தோல்வியை ஒப்புக்கொள்வது கடினம்
தவறி விழுவது சுலபம்உடனே எழுவது கடினம்
வாழ்க்கையைக் கொண்டாடுவது சுலபம்அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது கடினம்
உறுதிமொழி தருவது சுலபம்உறுதிமொழியைக் காப்பாற்றுவது கடினம்
பிறரை விமர்சிப்பது சுலபம்நம்மைத் திருத்திக் கொள்வது கடினம்
தவறுகள் செய்வது சுலபம்தவறுகளிலிருந்து பாடம் கற்பது கடினம்
நட்பை இழப்பது சுலபம்நல்ல நட்பைப் பெறுவது கடினம்
மேம்பாடுபற்றி சிந்திப்பது சுலபம்சிந்தித்ததை செயல்படுத்துவது கடினம்
பிறர்மீது பழிபோடுவது சுலபம்அவர்கள் கோணத்தில் பார்ப்பது கடினம்
பிறரடம் இருந்து பெறுவது சுலபம்பிறருக்குத் தருவது கடினம்
 

இளமை என்பது வயதல்ல. மனநிலை

young_man_and_old_manஇளமை என்பது வயதல்ல. மனநிலை.
தங்கள் இலட்சியங்களைக் கைவிடுபவர்களுக்கே வயதாகிறது.  இலட்சியங்களை இளமையாக வைத்திருப்பவர்கள், எப்போதும் இளமையாய் இருக்கறார்கள்.
நம்பிக்கை, முயற்சி, உறுதி இவையெல்லாமே இளமையின் அடையாளங்கள். திறந்த உலகின் உற்சாகச் செய்திகள் உங்களை வந்தடைந்தால் நீங்கள் இளமையய் இருப்பதாய் ‍அர்த்தம். ஒரு செய்தியும் வந்தடையாமல் உள்ளம் மூடியிருந்தால் வாழ்க்கையை விட்டு விலகி நிற்பதாய் ‍‍‍அர்த்தம்

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்


வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்


* எந்த விஷயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

*
அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

*
தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

*
விட்டுக் கொடுங்கள்.

*
சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

*
நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.

*
குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்..

*
உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

*
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.

*
அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
 
*
எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்கா
தீர்கள்.

*
கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

*
உங்கள் கருத்துகளில் உடும்புபிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

*
மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கா
தீர்கள்.

*
புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளா
தீர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும், திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

*
அவ்வபோது நண்பர்கள் உறவினர்களை நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

*
பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*
தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்..

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.



இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

பெண்கள் சொல்வதை கேளுங்க

பெண்கள் சொல்வதை கேளுங்க! ஈஸியா அட்ராக்ட் செய்யலாம்!!

Posted On Aug 12,2012,By Muthukumar
பொண்ணுங்களுக்கு என்ன புடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காகவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்.
பெண்களைக் கவர முதலில் டேக் இட் ஈசி பாலிசியை வளர்த்துக்கொள்ளுங்கள், எதற்கும் கவலைப்படாதீர்கள். அதுதான் பெண்ணைக் கவர்வதற்கான முதற்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்ய ஆரம்பித்து கடைசியில் உள்ளதும் போய்விடும்.
தன்னம்பிக்கை கொண்ட ஆண்களால்தான் பெண்களை எளிதில் கவரமுடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் தலைகவிழ்ந்து பேசாதீர்கள். கண்களை நேருக்கு நேராக சந்தித்து பேசுங்கள். உங்கள் உடல்மொழி, பேசும் திறன் போன்ற அனைத்திலும் தன்னம்பிக்கை மிளிரட்டும்.
சிடுமூஞ்சித்தனமாவோ, ரிசர்வ் டைப் ஆகவோ இருப்பதை விட புன்னகையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் கவர்கின்றனராம் எனவே உங்கள் உதடுகளில் புன்னகை தவழட்டும். சந்தோசமான புன்னகையை தினசரி கண்ணாடியைப் பார்த்தாவது பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
பேசும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். அதேபோல் உங்களுக்கு தெரிந்தவைகளை எல்லாம் பேசி பெண்களை மிரட்சியடையச் செய்யவேண்டாம். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அது தொடர்பானவைகளை முதலில் பேசி அசத்துங்கள். பின்னர் உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள்.
பெண்கள் கூறுவதை காதுகொடுத்து கவனியுங்கள். நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே அவர்களின் மனதில் உயர்ந்து விடுவீர்கள். பெண்களின் கண்களை கூர்ந்து கவனியுங்கள் அப்புறம் நீங்கள் கூறுவதை அவர்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
காதலிக்காகவோ, மனைவிக்காகவோ பொது இடங்களில் சென்று காத்திருப்பதில் தவறில்லை. அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும். காத்திருக்கும் சமயங்களில் என்ன பேசலாம் என்பதை ஒத்திகை பார்க்க இயலும்.

பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்

பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்

பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்று ம் அழைக்கப்படுகிறது.
பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்துகொ டுக்காது.
பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.
பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல் லது.
ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.
சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசைபோடவு ம் பசுவுக்குத் தேவை.
அசை போடும் போது நிமிடத் திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண் டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலி ருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.
 
பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல் லது.
மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின் றது.
பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உண வை ஜீரணிப்பதற்காக 4 பகுதி கள் உள்ளன.
மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத் தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.
பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமை யை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
கறக்கும் பசு மாடு நா ளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுர ந்து ஜீரணத்துக்கு பய ன்படுகிறது..
 
பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.
உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.
உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெரு மை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட் டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலக ச்சாதனை செய்த மாட்டின்பெயர் உர்பே ஆகும்.
இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்.

உங்களுக்கு தெரியுமா பாலை எப்படி காய்சனும்னு

உங்களுக்கு தெரியுமா பாலை எப்படி காய்சனும்னு

Posted On Aug 12,2012By Muthukumar
இல்லத்தரசிங்களே உங்களுக்கு பால் காய்ச்ச தெரியுமானு யாராவது கேட்டா இது என்ன கேள்வி? பால் கூடவா காய்ச்சத் தெரியாது? அது என்ன பெரிய விஷயமா? என்று சாதாரணமாகக் கேட்பார்கள். அப்படி கேட்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா தோழிகளே.
நீங்கள் எப்படி பால் காய்ச்சனும்னு உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன் தருகிற தகவல்களைப் படித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு தெரியும் பால் காய்ச்சுவதன் அருமை என்ன என்று.!
பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம்.
காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண்தான்.
பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின்தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
பாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும். பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.
ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம்.
இனியாவது பால் காய்ச்சும் போது சத்துக்களை அழித்துவிடாமல் ஒழுங்காக பால் காய்ச்சலாம் தோழிகளே.

தமிழ் நண்பர்கள்

திங்கள், 24 செப்டம்பர், 2012

IAS, IPS, IFS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு

Prepare your Son/Daughter for IAS, IPS, IFS Exam from Today !!!

IAS, IPS, IFS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு!

இந்த வருடம் UPSC எழுதும் சகோதரர்கள் கவனத்திற்கு நீங்கள் இத்தேர்வுக்கு தயாராக சில குறிப்பு புத்தகங்களை கிழே வரிசை படித்தி இருக்கின்றோம்.
 
முழு ஈடுபாடுடன் உங்களை தயார்ப்படுத்துங்கள் நீச்சயமாக நம்மாலும் IAS ,IPS, IFS ஆக முடியும் இன்ஷா அல்லாஹ்
 
1. இந்திய வரலாறு (Indian History – India Struggle for Independence )
பிபின் சந்திரா ( Bipin Chandra)
NCERT Books ( XI & XII )
புவியியல் (Geography ) Spectrum Books (P) Ltd.
 
2. இந்திய கொள்கைகள்(Indian Policy – Constitution Of India )
பக்ஷி (Bakshi)
 
3. இந்திய பொருளாதாராம் (Indian Economy )
பிரதியோகிதா தார்பனின்தியா (Pratiyogita Darpaninthia)
XI & XII – Plus One, Plus Two Books,
 
4. பொது அறிவியல் (General Science )
Tata Mc Graw Hill Guide
 
5. மனத்திறன் (Mental Ability – Quantitative Aptitude)
R.S. Aggarwal
 
6. நாட்டு நடப்புக்கு சில செய்தி தாள்கள் , வர மற்றும் மாத இதழ்கள்
(Current Affairs – Some magazines and Newspapers )
i. The Hindu/The Times of India
ii. Frontline
iii. Civil Service Chronicle
iv. Chanakya
v. Competition WIZARD
vi. Civil Services Today
 
7. வழிகாட்டி நூல்கள் (Guides)
1. Tata Mc Graw Hill
2. Spectrum
3. Unique
 
Jazakallah Khairan to Br.S N Ahamed Ibrahim B.Tech

பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா?

பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா?
குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சுசிலாவுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண்கள் இருவரும் பதினாறு வயதில்தான் பருவமடைந்தார்கள். மூன்றாவது பெண் பத்து வயதில் உட்கார்ந்துவிட்டாள். சின்னமகள் வயதுக்கு வந்ததை வெளியில் சொல்ல வெட்கப்பட்ட தாய், மகளை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.

""எங்க பரம்பரையில யாருமே 15 வயதுக்கு முன்னால பூப்படையமாட்டாங்க. இவள் 10 வயசுல வந்துட்டாள். ஏதாவது நோய் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர்.''

சிறுமியை பரிசோதித்த டாக்டர், ""புள்ளைக்கு உடம்புல புரோட்டின் சத்து அதிகமாட்டு இருக்கு. பிராய்லர் கோழி இறைச்சியில அதிக புரோட்டின் இருக்கு. அதை அதிகம் சாப்பிட்டால் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கு'' என்றார் டாக்டர்..

""ஆமாம் டாக்டர், பெரிய பொண்ணுங்களைவிட இவள் பிராய்லரை விரும்பிச் சாப்பிடுவாள். கோழி இறைச்சி இல்லைன்னா இவளுக்கு சாப்பாடு இறங்காது'' என்றார் சுசிலா.

இதே ஊரைச்சேர்ந்த கோகிலவாணியின் மகளும் 10 வயதில் வயதுக்கு வந்துவிட்டாள். (Your family too some daughters early happened like this)

பாஸ்ட்ஃபுட் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதால் இந்த வளர்ச்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமோ? சந்தேகப்பட்ட கோகிலவாணி மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

""பாஸ்ட்ஃபுட் சாப்பிட்டால் உடல் பருமனாகும். பருவத்திற்கு வரமாட்டாள். பிராய்லர் கோழி விரும்பிப் சாப்பிடுவாளா உங்கள் பெண்?'' -திருப்பிக் கேட்டார் பெண் மருத்துவர்.

""கோழிதான் காரணமா டாக்டர்?''

""கோழிக்கு போடுகிற ஊசி மருந்து காரணமாக இருக்கும்'' என்றார் டாக்டர்.

தற்போது பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடு வதை இந்தப் பகுதி மக்கள் வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பிராய்லர்கள்தான் காயத்ரி தேவி என்ற ஆரம்பப் பள்ளி மாணவியையும் தாய்மைக்கு தயாராக்கி யுள்ளது.

""10 வருடத்திற்கு முன்பு நகர்ப் புறத்து மக்கள் பிராய்லர் இறைச்சி யை விரும்பிச் சாப்பிட்டனர். இப்போது பிராய்லர் இறைச்சிக்கடை இல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு விற்பனையாகிக்கொண்டிருக் கிறது.

பிராய்லர் கோழிகள் சீக்கிரம் பெருக்கவேண்டும், எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார் கள்.
இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது.

இது ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறாô சமூக ஆர்வலர் சேம்ஜி. இது .உண்மை தானா?

பட்டுக்கோட்டை அரசு கால் நடை மருந்தக மருத்துவர் பெயர் வேண்டாம் என்ற கண்டிஷனோடு பதில் சொன்னார்.

""தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளவை கோழிகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகள்தான். கோழி வளர்ச் சிக்கான மருந்துகள் அல்ல. வெளி நாடுகளில் இறைச்சிக்காக வளர்க்கப் படும் பன்றி மற்றும் மாடுகளுக்கு குறுகிய நாளில் வளர்ச்சியடைய ஊசிகள் போடு வது வழக்கம். சில மாதங்களில் கொழுகொழுவென வளர்ந்துவிடும். இந்தியாவில் அத் தகைய மருந்துகள் பயன்படுத்தப் படவில்லை. ஏனெனில் அந்த மருந்துகளின் விலை அதிகம். ஆனால் பிராய்லர் இறைச்சியில் அதிகம் புரதச் சத்து இருப்பது உண்மை'' என்றார்.

கால்நடைகள் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவரிடம் நாம் இந்த "சிறுமிகள் பூப்படையும்' பிரச்சனை பற்றி கேட்டபோது...

""இந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. தென் மாவட்டங்களில் பிராய்லர் கோழியை அறிமுகப் படுத்தியதே நான்தான். அப்ப ஒரு பிராய்லர் கோழியின் அதிகபட்ச எடை ஒண்ணேகால் கிலோதான் இருக்கும். சிறிது காலத்தில் பெரு முதலாளிகள் இந்தத் தொழிலில் இறங்கிவிட்டனர்.

அவர்கள்தான் குஞ்சு, தீவனம், ஊசி என்று நேரடியாக கொடுத்து கோழி வளர்க்கச் சொல்லி கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புகிறார் கள். முதலில் இந்திய முறைப்படிதான் பிராய்லர் ஜீன் தயாரிக்கப்பட்டது. பெருமுதலாளிகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து தாய்க் கோழி வாங்கி வந்து உற்பத்தி செய்கிறார்கள். மருந்து களும் வெளிநாட்டு ஃபார்முலாதான். விவசாயத்திற்கு அமெரிக்க விதைகள் நுழைந்ததைப் போல கோழி மற்றும் பசுமாடுகளும் நுழைந்துவிட்டது.

வெளிநாட்டு ஃபார்முலாப்படி 45 நாளில் 2 கிலோ எடைக்கு வந்துவிடுகிறது பிராய்லர் கோழி. நிச்சயம் இதனால் பாதிப்புதான். இதனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டால் ஒரேநாளில் பிராய்லர் கோழி விற்பனை படுத்துவிடும். அதனால் தான் நாட்டுக்கோழி வளர்க்குமாறு நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். 10 வயதில் ஒரு சிறுமி பெரிய மனுஷியா வதற்கு பிராய் லர் இறைச்சியும் முக்கியமான காரணமாக இருக்கலாம்'' என்கிறார் பெயர்கூற விரும்பாத ஆய்வு மைய பேராசிரியர்.

தமிழக சுகாதாரத்துறை அவசர அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை இது
.
 

சனி, 25 ஆகஸ்ட், 2012

யாருக்கு சுதந்திரம்?

யாருக்கு சுதந்திரம்?

15 Aug 2012 யாருக்கு சுதந்திரம்
66-வது சுதந்திர தினத்தை நமது தேசம் கொண்டாடி முடித்து இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நமது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை விட்டொழித்துவிட்டு சென்ற பிறகு நாம் ஏராளமானவற்றில் முன்னேறியிருக்கிறோம். சாதனைகள் நமது சுதந்திரத்திற்கு புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. சுதந்திரத்தை விட மதிப்பான வேறெதுவும் இவ்வுலகில் மனிதனுக்கு இல்லை எனலாம்.
“சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புலேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா…”
“பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா
இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சு…..”
என்ற அல்லாமா இக்பாலின் வரிகளை இன்றும் நாம் வாசிக்கும் பொழுது சுதந்திரத்தின் அழகும், மணமும் நமது உள்ளங்களில் உயிரூட்டும். ஆனால், அந்த சுதந்திரத்தை இன்றைய இந்தியாவில் அனைத்து குடிமக்களும் குறிப்பாக ஏழைகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் முழுமையாக அனுபவிக்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே தொடர்கிறது.
ஏராளமான நிரபராதிகள் இன்று சிறைக் கூடங்களிலேயே தங்களது சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள். ஏன் இவர்கள் வெளியுலகை காணாமல் போனார்கள் என்பது குறித்து நமக்கு நாமே கேள்வி எழுப்ப இந்த சுதந்திர தினம் ஓர் அரிய வாய்ப்பாகும்.
தேசிய அல்லது சர்வதேச தனியார் குத்தகை நிறுவனங்கள் மண்ணிற்கும் மனிதர்களுக்கும் எதிரான தொழிற்சாலைகளை துவக்க வரும்பொழுது அப்பிரதேசத்தில் வாழும் மக்களில் எவரேனும் அதனை எதிர்த்து போராட துணிந்தால் அவர்கள் சிறைக்குள்ளே தள்ளப்படுகின்றார்கள். இவர்களின் மீது சாட்டப்படும் குற்றம், நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் என்பது அல்ல. மாறாக தேசத்துரோக குற்றம் சுமத்தப்படும். தேசத்துரோக குற்றங்களுக்கு ஜாமீன் கூட கிடைப்பது அபூர்வமாகும்.
சட்டீஷ்கரைச் சார்ந்த ஆசிரியையான சோனிசூரி சட்டவிரோத சுரங்கத் தொழில்களை எதிர்த்ததன் விளைவு தேசத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து அனுப்பிய கடிதத்தில் சோனி, தனக்கு நேர்ந்த கொடூரங்களை விவரிக்கிறார். கடிதத்தின் சில பகுதிகளை இங்கு காணலாம்: “இது நான் மட்டும் அனுபவிக்கும் கொடுமை அல்ல. என்னைப்போல சித்திரவதைகளை அனுபவிக்கும் ஏராளமான பெண்கள் இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலரும் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். பொய் வழக்குகளில் சிக்கவைத்து குற்றவாளியாக மாற்றப்பட்டவர்கள். இதற்கு எதிராக போராட துணிச்சல் இல்லை என்று மருகி நிற்கின்றார்கள். அவர்களுக்கு உதவ அவர்களுடைய உறவினர்கள் கூட தயாராகவில்லை. வேதனை மிகுந்த அவர்களின் கண்ணீர் கதைகளை கேட்கும் வேளையில் எனக்கு நேர்ந்த கொடுமைகள் சாதாரணம் என்று தோன்றும். நீங்கள் இந்த அபலை பெண்களுக்காக ஏதேனும் செய்தே தீரவேண்டும். இப்போராட்டம் அனைவருக்குமாகும்.”
உச்சநீதிமன்ற வழக்கறிஞருக்கு அனுப்பிய கடிதத்தில் சோனி இவ்வாறு கூறுகிறார்: “சிறையில் அவர்கள் எனக்கு மின்சார ஷாக் கொடுத்தனர். எனது ஆடைகளை அவிழ்த்தனர். நிர்வாணமாக்கப்பட்ட உடலை பார்த்து போலீஸ் சூப்பிரண்ட் ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். அவர் சென்ற பின்னர் இதர மூன்று பேர் என்னை கொடுமைக்கு ஆளாக்கினர். கடுமையான வேதனையால் நான் மயக்கமுற்று வீழ்ந்தேன்.”
2011 அக்டோபர் எட்டாம் தேதி இரவு இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. சோனியின் அந்தரங்க உறுப்புகளில் லத்தியும், உருளை கற்களையும் செருகி தங்களது வெறியை சில காக்கி உடை அணிந்த காலிகள் தணித்துள்ளனர். என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி பரிசோதனை அறிக்கைகளில் இந்த கொடுமை உறுதிச்செய்யப்பட்டது. சோனியின் உடலின் உள் பகுதியில் இருந்து மூன்று கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட அகற்றப்பட்டன. முதுகெலும்பிற்கு முறிவு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு கொடூரங்கள் அரங்கேறிய பிறகும் போலீஸ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக போலீஸ் சூப்பிரண்டிற்கு தீரச்செயலுக்கான குடியரசு தலைவரின் கேலண்ட்ரி விருதை வழங்கி கெளரவிக்கவும் சட்டம்-ஒழுங்கை பேணி பாதுகாக்கும் அரசு தயங்கவில்லை.
மனிதர்களையும் இயற்கையையும் கொள்ளையடிக்கும் குத்தகை நிறுவனங்களை எதிர்த்தால் அது தேச துரோக குற்றம் என்றால் தேசம் என்றாலே குத்தகை நிறுவனங்கள்தாம் என்ற கொள்கையைத்தான் ஆட்சியாளர்கள் அங்கீகரிக்கின்றார்கள். அவ்வாறெனில் சுதந்திரம் என்றால் மக்களுக்கு எதிரான குத்தகை நிறுவனங்களின் சுதந்திரம் என்பது ஆட்சியாளர்களின் அகராதியில் திருத்தி எழுதப்பட்டுள்ளது போலும்.
பிரிட்டீஷார் இந்தியர்களை அடக்கி ஒடுக்க பிரயோகித்த அதே கறுப்புச் சட்டங்கள்தாம் சுதந்திர இந்தியாவில் இந்திய மண்ணின் மைந்தர்களை ஒடுக்க பிரயோகிக்கப்படுகிறது. பிரிட்டீஷார் காந்தியடிகளை தேசத்துரோக குற்றம் சுமத்தி தண்டித்த அதேச் சட்டத்தின் மறு பதிப்பை பிரயோகித்துதான் டாக்டர்.பினாயக் சென் என்ற வெகுஜன மக்களின் ஆதரவு பெற்ற மருத்துவரை அரசு சிறையில் அடைத்தது.
அவ்வாறெனில் பிரிட்டீஷாரிடமிருந்து யாருக்கு சுதந்திரம் கிடைத்தது என்பது குறித்து இந்திய குடிமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
தலித்துகளிலும், பழங்குடியின மக்களிலும், சிறுபான்மை முஸ்லிம்களிலும் எத்தனையோ நிரபராதிகள் கறுப்புச் சட்டங்களில் சிக்கவைக்கப்பட்டு சிறைக்குள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றார்கள். மணிப்பூரில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் ராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனினும், ராணுவத்தினர் சில பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக கொடுமைகளை இழைக்க ஏதுவாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. AFSPA(The Armed Forces (Special Powers) Act) என்ற சட்டத்தின் யதார்த்தம் இதுதான்.
மனோரமா தேவியையும், இரோம் ஷர்மிளாவையும் மறந்துவிட்டு நாம் சுதந்திரத்தின் சுவையை அனுபவிக்க முடியுமா?
கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெற்றால் மட்டுமே நம்மால் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
அண்மையில் சானல்-4 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பான ‘கஷ்மீர் டார்ச்சர் டிரெயில்’ என்ற ஆவணப்படம் ராணுவக் குற்றங்களை ஓரளவு வெளிச்சம் போட்டு காட்டியது. 1989 -2009 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கை கஷ்மீரில் நடக்கும் கொடூரங்களை நமக்கு எடுத்தியம்புகின்றது.
ஏகாதிபத்தியம் பரப்புரைச் செய்த இஸ்லாமாஃபோபியா இந்தியாவிலும் ஒரு தேசிய நோயாக பரவி வருகிறது. பீகாரைச் சார்ந்த ஃபஸீஹ் மஹ்மூத் என்ற முஸ்லிம் இளம் பொறியாளர் குறித்து உச்சநீதிமன்றமே பல முறை கேள்வி எழுப்பிய பிறகும் மத்திய அரசால் இதுவரை முறையான பதிலை அளிக்க இயலவில்லை. சவூதியில் இருந்து கைது செய்யப்பட்ட ஃபஸீஹ், இந்திய அதிகாரிகளின் கஸ்டடியில் தான் உள்ளார் என்று அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ சிறைச்சாலைகளை தவிர ரகசியமான பயங்கர சிறைக் கொட்டகைகளும், சித்திரவதை கூடங்களும் நாட்டில் இயங்குகிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
ஏற்கனவே மும்பை, டெல்லி, கொல்கொத்தா, காஷ்மீர், குஜராத் ஆகிய இடங்களில் குவாண்டனமோவை ஒத்த சுமார் 15 சட்ட விரோத சிறைச்சாலைகள் செயல்பட்டு வருவதாக தி வீக் பத்திரிக்கை அதிர்ச்சியளிக்கும் அறிக்கையினை வெளியிட்டிருந்தது. பீகாரைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் முஹம்மது கத்தீல் சித்தீகி புனே எரவாடா சிறையில் வைத்துதான் அநியாயமாக கொலைச் செய்யப்பட்டார்.
சுதந்திரப் போராட்டத்தின் வாயிலாக இந்தியாவை விட்டு நம்மால் விரட்டப்பட்ட பிரிட்டீஷாரின் கொடிய சந்ததியான இஸ்ரேலுக்கு எதிராக கட்டுரை எழுதியதற்காக, இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி ஜாமீன் கூட மறுக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட ஒரு கால் ஊனமுற்ற அப்துல் நாஸர் மஃதனியை அதிகார பாசிச கும்பல்கள் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் சிறைக்குள் தள்ளியுள்ளன.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கண்ணின் பார்வையை இழந்த பிறகு இந்தியாவி உச்சநீதிமன்றம் கூட ஜாமீன் அளிக்க மறுத்து வருகிறது.
1990 க்குப் பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் கூட வெளியே விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் மஹாராஷ்டிர மாநில சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த (TISS – டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி மஹாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும்.
ஆகவே, அநியாய சிறைகளுக்கும், கறுப்புச் சட்டங்களுக்கும் எதிரான தொடர் போராட்டங்களே நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுடையதாக மாற்றும்.

திங்கள், 30 ஜூலை, 2012

குர்ஆனை படியுங்கள்

குர்ஆனை படியுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.
http://understandquran.com/ (Learn Arabic with Quran)
Learn Arabic and Read Quran with understand
நீங்கள் தினமும் குரானை படித்து, பின்பற்றி  வந்தால் வழி தவறிப்போக மாட்டிர்கள்   

 

இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இஸ்லாம் தான் தூய்மையான மார்க்கம் என்று உலகமே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னைத் தானே உண்மைப் படுத்தும் வேதமாக புனித மிக்க திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

முஸ்லீம்களும், திருமறைக் குர்ஆனும் ஓர் சமூகவியல் ஒப்பீடு.

இன்றைய நாட்களில் திருமறைக் குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது அவர்களின் நிலை மிகவும் கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.

ஏன் என்றால் இறைவனிடமிருந்து வந்த வஹியை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும் நமது சமுதாய சொந்தங்கள் அதைப் பற்றிய உண்மையான கண்ணியத்தைப் புரிந்து அதற்குறிய உரிமையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

# வயதில் மூத்த பலருக்கு இன்றும் குர்ஆன் ஓதத் தெரியாத அவல நிலை காணப்படுகின்றது.

# வருடத்தில் ஒரு தடவை கூட குர்ஆனைத் திறக்காத பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

# ரமழான் மாதத்தில் மாத்திரம் குர்ஆனை முற்படுத்தி விட்டு மற்ற 11 மாதங்களும் அதை மறந்து வாழ்வோர் நம்மில் பலர்.

# மரணித்தவர்களுக்கு மாத்திரம் குர்ஆனை ஓதி (பித்அத்தை செய்து பாவத்தை சுமந்து) விட்டு காலம் கழிப்பவர்கள் பலர்.

# குர்ஆன் சாதாரண மக்களுக்கு புரியாது 64 கலைகள் படித்த அறிஞர்களுக்குத் தான் புரியும் என்று கூறி இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

# குர்ஆனை உழு செய்து விட்டுத்தான் தொட வேண்டும், உழூ இல்லாதவர்கள் தொடக் கூடாது என்று கூறி ஓத நினைப்பவர்களுக்கும் தடை போடுபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஆனால் திருமறைக் குர்ஆனும் நபியர்களின் வாழ்வும் திருமறைக் குர்ஆனின் முக்கியத்துவம் தொடர்பாக பல ஆழமான கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏனோ இந்த இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்வதில்லை?

திருமறைக் குர்ஆன் தொடர்பாகவும், அதனை ஓதுவது தொடர்பாகவும் இஸ்லாம் முன்வைக்கம் கருத்துக்களைப் பாருங்கள். 

ஒட்டகங்களுக்கு ஈடாகும் வசனங்கள்.

திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பெருமானத்தைப் பற்றியும் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். "உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம்புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று பதிலளித்தோம். "உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதாஅவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)நூல் : முஸ்லிம்.

ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கும் ஒவ்வொரு ஒட்டகங்கள் கிடைப்பது சமனானது என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வளவு நிறைவான பலன்கள் கிடைக்கும் திருமறைக் குர்ஆனை ஓதுவதற்கு நம்மில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றோம். அதன் வசனங்களை படித்து விளங்க வேண்டும், அதன் மூலம் இம்மை மறுமை பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

வேதப் புத்தகமாக, வாழ்கை வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆன், பக்திப் பரவசத்தோடு பார்க்கப்படுகிறதே தவிர படிக்கப்படவில்லை. தூசு தட்டி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாப்பவர்கள், தூய்மையான வேதத்தை படித்துணர ஆசைப்படுவதில்லையே?

எந்த வேதத்திற்கும் இல்லாத எழுத்துக்குப் பத்து நன்மை என்ற பெருமை.

திருமறைக் குர்ஆனை ஓதுபவருக்கு வசனத்திற்கு ஒரு ஒட்டகம் கிடைப்பதைப் போல் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகளையும் இறைவன் அள்ளித் தர தயாராக இருப்பதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப்லாம்மீம் - என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாகஅலிஃப் ஓரெழுத்துலாம் ஓரெழுத்துமீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)நூல் : திர்மிதி.

ஒரு எழுத்தை ஓதினால் கூட பத்து நன்மைகளை இறைவன் அதன் மூலம் நமக்கு வழங்குவதாக நபியவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக ஓரிடத்தில் இருக்கும் போது திருமறைக் குர்ஆனின் பத்து வசனங்களை நாம் ஓதினால் அந்த வசனங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக் கணக்கான நன்மைகளை அள்ளித் தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்.

இந்த நன்மைகளையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு நாம் எத்தனை தடவைகள் முயற்சி செய்திருப்போம்?

வானவர்களுடன் இருக்கும் மனிதராக.............

இறைவனின் தூதர்களான வானவர்கள் (மலக்குகள்) நம்முடன் இருக்கும் பாக்கியம் கிடைப்பது என்பது உண்மை முஃமினுக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.

நபியவர்களின் நற்செய்தியைப் பாருங்கள்.

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல்கள் : முஸ்லிம்திர்மிதி

நீங்கள் எழுமிச்சையானவரா? பேரிச்சையானவரா? அல்லது குமட்டிக் காயானவரா?

நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவருக்கும், தீயவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், தீயவராகவும் இருந்து கொண்டு குர்ஆனையும் ஓதாமலும் இருப்பவருக்கும் உவமானம் என்னவென்பதை பிரித்துப் பிரித்து உதாரணம் கூறி நபியவர்கள் தெளிவுபடுத்தும் காட்சியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர்பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனைநன்றுசுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்புஅதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி)நூல் : புகாரி (5020)

பொறாமைப் பட்டு நன்மை செய்யுங்கள்.

இஸ்லாம் பொறாமை என்ற கெட்ட குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இரண்டு விஷயங்களில் தாராளமாக பொறாமைப் படலாம், பொறாமைப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதில் ஒன்றாக திருமறைக் குர்ஆன் ஓதப்பட வேண்டும் என்பதையும் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவுபகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)நூல் : புகாரி (5025)

திருமறைக் குர்ஆனுடன் ஒட்டி வாழ்பவர்களைப் பார்த்து நாமும் பொறாமைப் பட்டு அவர்களைப் போல் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வில் இணைத்து குர்ஆனிய வாழ்க்கை வாழ முற்பட வேண்டும்.

அமைதி இறங்கும். அருள் வானவர்களும் சூழ்ந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் ஆலையமான பள்ளியில் திருமறைக் குர்ஆனுடன் தொடர்பு வைப்பவர்கள் தொடர்பாக விரிவாகப் பேசும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

"அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டிபாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : முஸ்லிம்.

திருமறைக் குர்ஆனை கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பதுஅதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் இம்மை, மற்றும் மறுமையில் அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும். இதனடிப்படையில் இறைவனின் இறுதி வேதமான புனித திருக் குர்ஆனை நமது வாழ்வில் எடுத்து நடந்து குர்ஆனிய சமுதாயமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!


Source: http://ervadidargah.blogspot.in/2012/02/blog-post_09.html