இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 மே, 2013

வரலாற்றில் மின்னிடும் வைரங்கள்

வரலாற்றில் மின்னிடும் வைரங்கள்




                           வரலாற்றில் மின்னிடும் வைரங்கள்

‘இவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (அரிய) படிப்பினை உள்ளது.’ (12:111) என வான்மறை நெடுகிலும் வாழ்ந்து சென்ற இறைதூதர்கள் பற்றிப் பேசப்படுகிறது.

‘முன்னோர் வரலாறு பின்னோருக்குச் சிறந்த படிப்பினை!’ எனக்கூறுகிறது அராபியப் பழமொழி.’
ஆம்! வரலாறுகள் மனிதனை உருவாக்குவதில் மிகப்பெரும் இடத்தை வகிக்கிறது. எனவே தான், பக்கத்துக்கு பக்கம் வரலாறுகளைச் சொல்லிக்கொண்டே வருகிறது வேதத்திருமறை. அந்த வரலாற்றைப் படிக்கப் படிக்க வரலாற்றை உருவாக்கும் வீரமும் தீரமும் பிறக்கிறது மனிதனுக்கு! அதனால்தான்

”வரலாற்றைப் படிப்பதைவிட வரலாற்றைப் படைப்பது மேல்”

என்றார் ஓர் அறிஞர். அவர் கூறியவாறு வரலாற்றைப் படைக்க வரலாறுகளைத் திரும்பிப் பார்க்கிறோம்.

அங்கே உலா வருபவர்கள் யார் யார் தெரியுமா ?

1.உலகே வியக்க வைக்கும் இறைதூதர்கள்!

2.அடுத்து அந்த இறைதூதர்களின் மாபெரும் தலைவர்!

“அவர் தான் ஒருநூறு தலைவர்களின் வரிசையில் முதன்மையானவராக அமெரிக்கக் கிறித்தவராலும் உலகோராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.”

.அடுத்து உலாவருபர்கள் யார் தெரியுமா?

3.”பற்றற்ற துறவிகள் ஆட்சிபீடத்திலமர்ந்து அரசோச்சும் அற்புத மாட்சியைக் காணவேண்டும்” என மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கப்பேரறிஞன் பிளேட்டோ கண்ட இலட்சியக்கனவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர் நனவாக்கிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சிபீடமேறிய நான்கு உத்தமக் கலீபாக்கள்!

உடுத்திய ஒட்டு போட்ட ஆடையும், முரட்டு மாற்றாடை ஒன்றுந் தவிர்த்து வேற்றுடையற்றோராய் ஈற்றங் கூரை வேய்ந்த பெருமானாரின் பள்ளியிலே, மண்தரையிலே அமர்ந்து பிரமாண்டமான இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அரசோச்சினர் இந்த மனிதகுல மாணிக்கங்கள்.

அடுத்து எந்தக்கணத்திலும் அல்லாஹ்வுக்காக,அவனது ரஸூலுக்காக எதையும் துச்சமாக மதித்துத் தியாகம் செய்ய முன்வந்த தியாக சீலர்களான ஸஹாபா பெருமக்கள்.

”அல்லாஹ்விடம் வாக்களித்தவாறே உயிரைத்தியாகம் செய்த உத்தமர்களும், இன்னுயிரைத்தியாகம் செய்யக்காத்திருப்பவர்களும் இருந்தனர்” என இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட இலட்சியவாதிகள்.(குர்ஆன்: 23:33)

4.பெருமானாரின் இலட்சோப இலட்சம் பொன்மொழிகளை உலகுக்கு வாரி வழங்க நெடிய பயணம் மேற்கொண்டு தங்களை அர்ப்பணித்த இமாம்கள் என்னும் அற்புதப்புனிதர்கள்! அறிவை அள்ளி வழங்கிய அறிவுலக மேதைகள்! !

5.இஸ்லாத்தை உயிரினும் மேலாக மதித்து அதை அமுல் படுத்தி உலகையே வியப்பிலாழ்த்திய சிறந்த ஆட்சியாளர்கள்.

6.இறைவனது மார்க்கமே உலகிலே மேலானது.இறைதூதருடைய வாக்கே உயர்வானது என அல்லும் பகலும் போராடிய வீர தீரர்கள்!

7.இக்லாஸ் என்னும் தூய எண்ணத்தோடு இறைவனை அஞ்சி (தக்வாவுடன்) சத்தியம் ஒன்றிற்காக வாழ்ந்த உத்தமப் பெரியார்கள்.

இவ்வாறு வரிசை வரிசையாக ”வள்ளல் பெருமானார்(ஸல்) முதல் இன்று வரை” வாழ்ந்த பலரையும் வரலாற்றிலே உலாவரக் கண்டோம்.

விஞ்ஞானத்தின் உச்சிக்கே சென்று உலகை வியக்க வைத்துச் சாதனைகளைப் படைக்கும் இன்றைய மனிதனிடம் நம்பிக்கை,பண்பாடு,மனிதநேயம் அனைத்தும் ஆட்டம் கண்டு அழிவு, அக்கிரமம், பயங்கரவாதம், அந்நிய நாடுகளை ஆக்கிரமித்து மக்களைக் கொன்று குவிக்கும் காட்டுமிராண்டித்தனம் போன்ற ஈனச்செயல்கள் சூழ்ந்து கொண்டு அவனது நிம்மதியையும் சகவாழ்வையும் குலைத்து வருகின்றன.

காரணம்? ஒருசார்பான வளர்ச்சி!

விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள அளவுக்கு ஆத்மார்த்த அறிவு, ஒழுக்கம், பண்பாடு, மனித நேயம் ஆகியவையும் சேர்ந்து வளர்ந்திருக்குமாயின் இந்த பயங்கர நிலைமைக்கு உலகம் வந்திருக்காது. இந்த நல்ல பண்புகளைப் போதிக்க வேண்டிய மதவாதிகளே பயங்கரவாதத்திற்கும் அழிவுக்கும் துணைபோகும் போது எப்படி உலகில் அமைதியை எதிர்கார்க்க முடியும் ?

இதற்கெல்லாம் ஒரேவழி அன்பையும், அறத்தையும், அமைதியையும், நல்லொழுக் கத்தையும் மனித நேயத்தையும் போதிக்கும் இஸ்லாத்தின் பால் உலகம் திரும்ப வேண்டும். அப்போது தான் உலகம் அமைதியையும் உயர்வையும் அடைய முடியும்.

அதற்கான வழிகளையும் பாடங்களையும் இறைமறையிலிருந்தும், இறைதூதர் வாழ்விலிருந்தும் அதன் அடியொற்றி செயல்பட்ட உத்தமர்கள் வீர வரலாறிலிருந்தும் அறியலாம். எனவே உயிரோட்டமுள்ள வரலாற்று நிகழ்வுகளை கீழே காணும் மாமனிதர்களின்  வரலாறுகள் மூலம் பயன் பெற அருள் புரிவானாக!

அந்த மாமனிதர்கள் இவர்கள் தான்!

1. பார்போற்றும் பெருமானார் (ஸல்)
2. ஏகத்துவம் பேசிய இறைதூதர்கள் (அலை)
3. நேர்வழிநின்ற கலீபாக்கள் 4. சுவனவாசிகள்
5. நல்லறத் தோழர்கள்
6. நல்லறத் தோழியர்கள்
7. வீரத் தியாகிகள்,
8. தனிப்பெரும் தாபியீன்கள்
9. மாண்பார் இமாம்கள்
10.அறம்நின்ற ஆட்சியாளர்கள்
11.அறிவுலக மேதைகள்
12.நனிசிறந்த நல்லோர்கள்.

வல்ல ரஹ்மான் இந்த உத்தமர்களின் வரலாறுகள் மூலம் பயன் பெற அருள் புரிவானாக

திங்கள், 30 ஜூலை, 2012

குர்ஆனை படியுங்கள்

குர்ஆனை படியுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.
http://understandquran.com/ (Learn Arabic with Quran)
Learn Arabic and Read Quran with understand
நீங்கள் தினமும் குரானை படித்து, பின்பற்றி  வந்தால் வழி தவறிப்போக மாட்டிர்கள்   

 

இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இஸ்லாம் தான் தூய்மையான மார்க்கம் என்று உலகமே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னைத் தானே உண்மைப் படுத்தும் வேதமாக புனித மிக்க திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

முஸ்லீம்களும், திருமறைக் குர்ஆனும் ஓர் சமூகவியல் ஒப்பீடு.

இன்றைய நாட்களில் திருமறைக் குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது அவர்களின் நிலை மிகவும் கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.

ஏன் என்றால் இறைவனிடமிருந்து வந்த வஹியை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும் நமது சமுதாய சொந்தங்கள் அதைப் பற்றிய உண்மையான கண்ணியத்தைப் புரிந்து அதற்குறிய உரிமையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

# வயதில் மூத்த பலருக்கு இன்றும் குர்ஆன் ஓதத் தெரியாத அவல நிலை காணப்படுகின்றது.

# வருடத்தில் ஒரு தடவை கூட குர்ஆனைத் திறக்காத பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

# ரமழான் மாதத்தில் மாத்திரம் குர்ஆனை முற்படுத்தி விட்டு மற்ற 11 மாதங்களும் அதை மறந்து வாழ்வோர் நம்மில் பலர்.

# மரணித்தவர்களுக்கு மாத்திரம் குர்ஆனை ஓதி (பித்அத்தை செய்து பாவத்தை சுமந்து) விட்டு காலம் கழிப்பவர்கள் பலர்.

# குர்ஆன் சாதாரண மக்களுக்கு புரியாது 64 கலைகள் படித்த அறிஞர்களுக்குத் தான் புரியும் என்று கூறி இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

# குர்ஆனை உழு செய்து விட்டுத்தான் தொட வேண்டும், உழூ இல்லாதவர்கள் தொடக் கூடாது என்று கூறி ஓத நினைப்பவர்களுக்கும் தடை போடுபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஆனால் திருமறைக் குர்ஆனும் நபியர்களின் வாழ்வும் திருமறைக் குர்ஆனின் முக்கியத்துவம் தொடர்பாக பல ஆழமான கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏனோ இந்த இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்வதில்லை?

திருமறைக் குர்ஆன் தொடர்பாகவும், அதனை ஓதுவது தொடர்பாகவும் இஸ்லாம் முன்வைக்கம் கருத்துக்களைப் பாருங்கள். 

ஒட்டகங்களுக்கு ஈடாகும் வசனங்கள்.

திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பெருமானத்தைப் பற்றியும் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். "உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம்புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று பதிலளித்தோம். "உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதாஅவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)நூல் : முஸ்லிம்.

ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கும் ஒவ்வொரு ஒட்டகங்கள் கிடைப்பது சமனானது என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வளவு நிறைவான பலன்கள் கிடைக்கும் திருமறைக் குர்ஆனை ஓதுவதற்கு நம்மில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றோம். அதன் வசனங்களை படித்து விளங்க வேண்டும், அதன் மூலம் இம்மை மறுமை பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

வேதப் புத்தகமாக, வாழ்கை வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆன், பக்திப் பரவசத்தோடு பார்க்கப்படுகிறதே தவிர படிக்கப்படவில்லை. தூசு தட்டி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாப்பவர்கள், தூய்மையான வேதத்தை படித்துணர ஆசைப்படுவதில்லையே?

எந்த வேதத்திற்கும் இல்லாத எழுத்துக்குப் பத்து நன்மை என்ற பெருமை.

திருமறைக் குர்ஆனை ஓதுபவருக்கு வசனத்திற்கு ஒரு ஒட்டகம் கிடைப்பதைப் போல் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகளையும் இறைவன் அள்ளித் தர தயாராக இருப்பதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப்லாம்மீம் - என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாகஅலிஃப் ஓரெழுத்துலாம் ஓரெழுத்துமீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)நூல் : திர்மிதி.

ஒரு எழுத்தை ஓதினால் கூட பத்து நன்மைகளை இறைவன் அதன் மூலம் நமக்கு வழங்குவதாக நபியவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக ஓரிடத்தில் இருக்கும் போது திருமறைக் குர்ஆனின் பத்து வசனங்களை நாம் ஓதினால் அந்த வசனங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக் கணக்கான நன்மைகளை அள்ளித் தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்.

இந்த நன்மைகளையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு நாம் எத்தனை தடவைகள் முயற்சி செய்திருப்போம்?

வானவர்களுடன் இருக்கும் மனிதராக.............

இறைவனின் தூதர்களான வானவர்கள் (மலக்குகள்) நம்முடன் இருக்கும் பாக்கியம் கிடைப்பது என்பது உண்மை முஃமினுக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.

நபியவர்களின் நற்செய்தியைப் பாருங்கள்.

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல்கள் : முஸ்லிம்திர்மிதி

நீங்கள் எழுமிச்சையானவரா? பேரிச்சையானவரா? அல்லது குமட்டிக் காயானவரா?

நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவருக்கும், தீயவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், தீயவராகவும் இருந்து கொண்டு குர்ஆனையும் ஓதாமலும் இருப்பவருக்கும் உவமானம் என்னவென்பதை பிரித்துப் பிரித்து உதாரணம் கூறி நபியவர்கள் தெளிவுபடுத்தும் காட்சியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர்பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனைநன்றுசுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்புஅதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி)நூல் : புகாரி (5020)

பொறாமைப் பட்டு நன்மை செய்யுங்கள்.

இஸ்லாம் பொறாமை என்ற கெட்ட குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இரண்டு விஷயங்களில் தாராளமாக பொறாமைப் படலாம், பொறாமைப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதில் ஒன்றாக திருமறைக் குர்ஆன் ஓதப்பட வேண்டும் என்பதையும் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவுபகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)நூல் : புகாரி (5025)

திருமறைக் குர்ஆனுடன் ஒட்டி வாழ்பவர்களைப் பார்த்து நாமும் பொறாமைப் பட்டு அவர்களைப் போல் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வில் இணைத்து குர்ஆனிய வாழ்க்கை வாழ முற்பட வேண்டும்.

அமைதி இறங்கும். அருள் வானவர்களும் சூழ்ந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் ஆலையமான பள்ளியில் திருமறைக் குர்ஆனுடன் தொடர்பு வைப்பவர்கள் தொடர்பாக விரிவாகப் பேசும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

"அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டிபாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : முஸ்லிம்.

திருமறைக் குர்ஆனை கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பதுஅதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் இம்மை, மற்றும் மறுமையில் அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும். இதனடிப்படையில் இறைவனின் இறுதி வேதமான புனித திருக் குர்ஆனை நமது வாழ்வில் எடுத்து நடந்து குர்ஆனிய சமுதாயமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!


Source: http://ervadidargah.blogspot.in/2012/02/blog-post_09.html

வெள்ளி, 11 மே, 2012

What's our Excuse for missing the PRAYERS?!!

What's our Excuse for missing the PRAYERS?!!




What's our Excuse for missing the PRAYERS?!!

The first matter that the slave will be brought to account for on the Day of Judgment 
is the prayer. If it is sound, then the rest of his deeds will be sound. And if it is bad, 
then the rest of his deeds will be bad." [Recorded by al-Tabarani. According to al-
Albani, it is sahih. Al-Albani, Sahih al-Jami, vol.1, p. 
503. "If a person had a stream outside his door and he bathed in it five times a day, 
do you think he would have any filth left on him?" The people said, "No filth would 
remain on him whatsoever." The Prophet (peace be upon him) then said, "That is like 
the five daily prayers: Allah wipes away the sins by them." (Recorded by al-Bukhari 

சனி, 10 மார்ச், 2012

முஸ்லிம்கள் கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா

முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?

blackstone
மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர்.