குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 ஜூன், 2013

குழந்தைகளின் 10 கட்டளைகள்


"வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டுவிட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப்போகிறீர்கள்" என்றார் அப்துல் ரகுமான்.  குழந்தைகளின் உலகத்தையும் உள்ளத்தையும் நாம் புரிந்துகொள்ள... இ‍தோ... அவர்கள் நமக்கு சொல்ல நினைக்கும் விஷயங்கள்...
J0149018
1. என் கைகள் சின்னஞ்சிறியவை, நான் பந்து வீசினாலோ, படம் வரைந்தாலோ, நீங்கள் எதிர்பார்க்கும்படி இருக்காது.  இருந்தாலும் என்னைப் பாராட்டுங்கள்.  என் கால்கள் சின்னஞ்சிறியவை, என்னோடு நடக்கும்போது கொஞ்சம் மெதுவாக நடங்கள்.  நானும் கூட வருகிறேனில்லையா.!
2. நீங்கள் பார்த்த அளவு இந்த உலகை நான் பார்த்ததில்லை.  நானாகப் பார்த்துக் தெரிந்து கொள்ள ‍‍அனுமதியுங்கள்.  எதற்கெடுத்தாலும் தடைவிதிக்காதீர்கள்.
3. வீட்டுவேலை இருக்கத்தான் செய்யும். ஆனால் நான் குழந்தையாய் இருக்கப்‍போவது கொஞ்சகாலம்தானே.  நான் வளரும் முன் எனக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்ல நேரம் ஒதுக்குங்கள்.
4. என் பிஞ்சு மனம் மென்மையானது. என்னைத் திட்டிக்கொண்டே இருக்காதீர்கள். முடிந்த அளவு இதமாக என்னை நடத்துங்கள்.
5. நீங்கள் கேட்டதால் உங்களுக்குக் கடவுள் கொடுத்த பரிசல்லவா நான்! என்னைப் பொறுப்போடு கையாளுங்கள். பொறுமையாக வழி நடத்துங்கள்.
PH03425I
6. நான் வளர்வதற்கும் மலர்வதற்கும் உங்கள் பாராட்டும் ‍அன்பும் தேவை.  எனக்கு ஊக்கம் கொடுங்கள்.  மென்மையாக தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்.  வலிக்கும் விதமாக விமர்சிக்காதீர்கள்.
7.என் தவறுகளை நானே உணர்ந்து திருத்திக்கொள்ள வாய்ப்புக் கொடுங்கள்.  சின்னச் சின்னப் பிழைகளை மாற்றக் கொள்ள நேரம் கொடுங்கள்.
8. சில விஷயங்களை சிரமப்பட்டாவத நானே செய்து கொள்கிறேன்.  என்னால் முடியாது என்று தீர்மானிக்காதீர்கள். என் சகோதரர்களுடனோ பிற குழந்தைகளுடனோ ஒப்பிட்டு என்னைத் திட்டாதீர்கள்.
J0202045
9. பிரார்த்தனை செய்கிற இடங்களுக்கும், பிறருக்கு உதவும் இடங்களுக்கும் என்னை அழைத்துச் செல்லுங்கள்.
10. என்னை தண்டிக்க நினைப்பீர்களானால், ஒரு தடவைக்கு இரண்டு தடவை... யோசியுங்கள்.  கடுமையான வார்த்தைகளை தயவு செய்து சொல்லாதீர்கள்.
__________________________________________________

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு: எட்டு சவால்கள்....எதிர்கொள்ளும் வழி!
நாச்சியாள்,   படம்: வீ.நாகமணி
உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்... குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்... முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.

திங்கள், 26 மார்ச், 2012

கணவன் மனைவி படுக்கையறை எப்படி இருக்க வேண்டும்?

படுக்கையறையை அழகாக வைத்துக்கொள்வதில் மனைவியின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று சொல்வதைக்காட்டிலும் மனைவியின் டேஸ்ட்டுக்கே விட்டு விடுங்கள். ஏனெனில் படுக்கையறையைப் பொருத்தமட்டில் கணவனைவிட மனைவிக்கே அதிக உரிமை உள்ள இடம்.

சனி, 10 மார்ச், 2012

பெண்ணின் முகத்திலிருந்து என்னென்ன தெரிந்துகொள்ள‍லாம் தெரியுமா!?

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந் தோஷமாக இருக்கிறாரா, எதையா வது நினைத்துக் கொண்டிருக்கிறாரா.
அவரை நம்பலாமா, கூடாதா, கடவு ள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண் ணின் முகத்திலிருந்து தெரிந்து கொ ள்ளலாமாம்.