வெள்ளி, 13 ஏப்ரல், 2012

ஏவியேஷன் மேனேஜ்மென்ட் 6 மாத டிப்ளமோ படிப்பு

இந்திய விமானத் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 25 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. இத்துறை சார்ந்த கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. மற்ற துறைகளைக் காட்டிலும் இத்துறையில் ஊதியமும் அதிகம். உள்நாட்டு, சர்வதேச விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பணிவாய்ப்புகள் உள்ளன.


வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதால் பல்வேறு நிறுவனங்களும் ஏவியேஷன் மேனேஜ்மென்ட்டில் புதிய படிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த டிப்ளமோ படிப்புகளின் காலம் 6 மாதம்  முதல் இரண்டு ஆண்டுகள் வரை உள்ளது.
கிங்பிஷர் டிரெய்னிங் அகாடமி
ஏவியெஷன் மேனேஜ்மென்ட்டில் 6 மாத டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஏவியேஷன் அண்டு ஹாஸ்பி டாலிட்டி மேனேஜ் மென்ட்டில் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பையும் வழங்கி வருகிறது.
மாணவர்களின் பயிற்சிக்காக ஒரு ஏர்பஸ் 320 விமானத்தின் மாதிரி இங்குள்ளது. 6 மாத படிப்புக்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு ஆண்டு படிப்புக்கு கட்டணமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது  ஏர் ஹோஸ்டஸ் அகடமி நிறுவனமும், ஒரு ஆண்டு ஏவியேஷன் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பையும், இரண்டு ஆண்டு குளோபல் மேனேஜ்மென்ட் அன்ட் ஹாஸ்பிடாலிட்டி டிப்ளமோ படிப்பையும் வழங்கி வருகிறது. இந்த படிப்புகளுக்கு கட்டணமாக 1 லட்சத்து 18  ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கேபின் பணி, ஏவியேஷன் டெர்மினாலஜி போன்றவை குறித்து இதில் கற்றுத் தரப்படுகிறது. தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தவும் இப்படிப்பு உதவுகிறது.
ஸ்பைல் ஜெட், வார்ஜின் அட்லான்டிக், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், இண்டிகோ, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தகுதிவாய்ந்த மாணவர்ககளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இளம் வயதிலேயே அதிகமாக சம்பாதிக்கவும், உலகை சுற்றிவரவும் இந்த துறை வாய்ப்பளிக்கிறது. உள்நாட்டு விமான நிறுவனங்களில் தொடக்கத்திலேயே 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. சர்வதேச நிறுவனங்களில் 1லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக