சேற்று நண்டு
ஏற்றுமதி சந்தையில் அதிகம் தேவையிருப்பதால், சேற்று நண்டு, பிரபலமாகி வருகிறது. வர்த்தக ரீதியாக நண்டு வளர்ப்பு இப்பொழுது ஆந்திரம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் வேகம் பரவி வருகிறது
கடலோர பகுதிகள், கழிமுகம் மற்றம் உப்பங்கழி ஆகிய பகுதிகளில், சில்லா (Scylla) என்ற வகை சேற்று நண்டுகள் காணப்படும்.
i. பெரிய இனங்கள் :
- பெரிய வகை நண்டுகள் வட்டார மொழியில் 'பச்சை சேற்று நண்டு' என்ற அழைக்கப்படும்
- இவை அதிகபட்சமாக 22 செ.மீ அகலமும், 2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை.
- இவை சுதந்திரமாக வாழக்கூடியவை. இவைகளின் கால் போன்ற பகுதிகளில், பல கோண வடிவ வரிகள் காணலாம்.
ii. சிறிய வகைகள்:
- சிறிய வகைகள், 'ரெட் கிளா' என்று அழைக்கப்படும்
- இவை அதிகபட்சமாக 12.7 செ.மீ அகலமும், 1.2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை
- இவைகளில் பல கோண வடிவ வரிகள் காணப்படாது. இவை மண் தோண்டும் பழக்கமுடையவை.
இரு வகைகளுக்கும், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் அதிக தேவையுள்ளது.
மென் ஓடு நண்டுகளை, சில வாரங்கள், வெளி ஓடு தடிப்பு ஆகும் வரை வளர்க்கப்படும். இந்த கடின ஓடுடைய நண்டுகள், வட்டார வாக்கில் சேறு (சதை) என்று வழங்கப்படும். இவை சாதாரன மென் நண்டுகளை விட மூன்றில் இருந்து நான்கு மடங்க விலை அதிகமாக விற்கப்படும்
- 1 - 1.5 மீ நீரின் ஆழம் கொண்ட, 0.025 - 0.2 ஹெக்டர் அளவுடைய கடலோர குட்டைகளில் தடிமனாக்கும் முறையை கையாளலாம்.
- விதை மென் நண்டுகளை விடுவதற்கு முன்னர், குட்டையின் அடிப்புற நீரை வடிகட்டி, சூரியனால் உலர்த்தி, தேவையான அளவு சுண்ணாம்பை இட வேண்டும்.
- குட்டையின் வரப்பை ஓட்டைகள், விரிசல்கள் இல்லாதவாறு, மொழுக வேண்டும். மதகு பகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இதன் வழியாக தான் நண்டுகள் தப்பிச் செல்லும்.
- நுழைவாயில் பகுதியில், வரப்பை, மூங்கில் பாய்க் கொண்டு வலுவூட்ட வேண்டும்.
- வரப்பினை மூங்கில் குச்சிகள் மற்றும் வலையினை கொண்டு சரியான முறையில் வேலியிட வேண்டும். நண்டு வெயியேறுவதை தவிர்க்க, இந்த வேலிகள், குட்டையில் உட்புறம் சாய்வலாக அமைய வேண்டும்.
- மீனவர்கள் அல்லது நண்டு விற்பவர்களிடமிருந்து, விதை மென் நண்டினை வாங்கி, இதன் அளவை பொறுத்து, ஒரு சதுர மீட்டருக்கு 0.5-லிருந்து 2 வரை இட வேண்டும்.
- சந்தையில், 550 கிராம் எடைக்கு மேல் உள்ள நண்டுகளுக்கு கிராக்கி அதிகம். எனவே இவ்வகை நண்டுகளை விதை நண்டாக விடுவது நல்லது. இவ்வாறு விடும் போது ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நண்டே இட வேண்டும்.
- வட்டாரம் மற்றும் நீர் நண்டு கிடைப்பதை பொறுத்து, 6 - 8 தடிமனாக்கும் சுழற்சிகளை கையாளலாம்.
- வளர்ப்பு குட்டை பெரியதாக இருப்பின், அதனை வெவ்வேறு பாத்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து, வெவ்வேறு அளவுடைய நண்டினை வெவ்வேறு பாத்திகளில் விட்டு வளர்க்கலாம். இதனால் எளிதாக உணவு அளிப்பது, கண்கானிப்பது, அறுவடை செய்வது முடியும்
- விதை நண்டு இடும் இடைவெளி அதிகமாக இருப்பின், ஒரே பாத்தியில் ஒரே மாதிரியான நண்டினை இடலாம்.
- ஆண் நண்டு, பெண் நண்டினை தனித்தனி பாத்திகளில் வளர்ப்பதன் மூலம், வலிய ஆண் நண்டின் தாக்குதலை குறைக்க முடியும். பழைய டயர்கள், மூங்கில் கூடைகள் போன்ற தங்குமிடங்களை இடுவதன் மூலமும் தாக்குதல் மற்றும் நண்டே நண்டினை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக