சனி, 10 மார்ச், 2012

முஸ்லிம்கள் கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா

முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?

blackstone
மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர்.
இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல!
மாறாக அகில உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் அனுப்ப பட்ட இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ஏக இறைவனால் புனிதப்படுத்தப்பட்ட அந்த கஃபாவில் இருக்கும் அக்கல்லை முத்தமிட்டார்கள் என்பதற்காக, முஹம்மது நபி (ஸல்) அவர்களை தமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பின்பற்றக்கூடிய முஸ்லிம்களும் அக்கல்லை முத்தமிடுகின்றனர். மாற்று மத சகோதரர்கள் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் அக்கல்லிற்கு ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது என்பதற்காக அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக