சனி, 25 மே, 2013

வெற்றிக் கதைகள் காண

2011 வெற்றிக் கதைகள் காண ]




25.6.12
ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக் கூடியவை. இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர்.
அதே சமயம், வீரிய ரக மகசூலுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை.. பாரம்பரிய ரகங்களின் விளைச்சல்  என்று இன்னொருப் பக்கம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள். இதோ.. இந்த அருண்கூட  அத்தகையோரில் ஒருவர்தான்!
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ஜங்காலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அருண். கடந்த கார்த்திகை மாதத்தில் அரை ஏக்கரில் கிச்சடி சம்பா நெல்லை நடவு செய்தார். அப்போதைக்கு, அதைப் பார்த்து சந்தேகத்தோடு பேசிய மற்ற விவசாயிகள், தற்போது அவருக்குக் கிடைத்த மகசூலைப் பார்த்த ஆச்சரியத்தில் வாயடைத்துக் கிடக்கின்றார்கள்.
கொஞ்சம் வருடத்திற்கு முன் நான் ஒரு ரசாயன விவசாயி. பசுமை விகடன் மூலமாக நம்மாழ்வார் அய்யாவின் தொடர்பு கிடைத்தது. அதிலிருந்து ஒரு குண்டு மணி ரசாயனம் கூட  சேர்க்காமல் மஞ்சள், வாழை, நிலக்கடலை, சாமந்தி, நெல் என்று சுழற்சி முறையில் சாகுபடி செய்கிறேன்.
பொதுவாகவே, எங்க ஏரியா மண்ணில் நெல் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். இந்த நிலையில் நான் கிச்சடி சம்பா நெல்லை நடனும் என்று முடிவு செய்த போது.. என்னோட நண்பர்கள் சிலர் சலனப்படுத்தினாங்க. அதோட, ‘ஆடிப்பட்டம்தான் சம்பா நெல்லுக்குப் பொருத்தமான சீசன். இப்போது விளைச்சல் சிறப்பாக இருக்காது என்று பயமுறுத்தினாங்க. ஆனாலும், எனக்குள் ஒரு வெறி, பழைய நெல் ரகங்கள், நவீன ரகங்களுக்கு ஈடுகொடுத்து விளையாது என்ற கருத்தை உடைக்கணும் என்று நினைத்தேன். அதற்காகவே தீவிரமாக களத்தில் இறங்கி, இப்போது சாதித்தும் காட்டியிருக்கிறேன் என்றார்.
இதுதான் தற்சார்பு விவசாயம்!
எங்க பகுதியில் இருக்கும் கீரைப்பட்டி விவசாயி கோவிந்தராஜ்கிட்ட, 15 கிலோ விதை நெல்லை வாங்கி வந்து நாத்து விட்டேன். நடவுக்கு 25 சென்ட் அளவு கொண்ட இரண்டு வயல்களை  எடுத்துக் கொண்டேன். ஒரு வயலில் கிளரிசீடியா மாதிரியான தழைகளையும், மண்புழு உரத்தையும் மட்டும்தான் போட்டேன். இன்னொரு வயலில் பல தானியச் செடிகளை மடக்கிச் சேர்த்து சேறடித்தேன். இரண்டு வயலிலும் சாரி ( வரிசை) நடவு முறையில், சாரிக்கு சாரி ஒரு அடி இடைவெளியில் நடவு செய்தேன்.
தற்சார்பு விவசாயம்!
பூச்சிகளைக் கட்டுப்படுத்த வயலில் அங்கங்கே பறவைத் தாங்கிகளை அமைத்தேன். வரப்பில் உளுந்து நடவு செய்தேன். இதுபோக, ஒட்டுப் பொறிகளையும் சில இடத்தில் அமைத்தேன். இரண்டு முறை மூலிகைப் பூச்சிவிரட்டி, ஒரு முறை மோர் தேங்காய்ப் பால் கரைசல் என்று தெளித்தேன். ஒரு முறை கோனோவீடர் உருட்டி களைகளை அமுக்கி விட்டேன். இவ்வளவுதான் நெல்லுக்கு நான் செய்த பராமரிப்பு. இப்படி தற்சார்பு முறையில் விவசாயம் செய்ததால்.. எனக்குப் பெரிதாக செலவு எதுவும் இல்லை. மண்புழு உரத்தைக்கூட நானே தயார் செய்து கொண்டேன்.
ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்!
50 சென்ட் நிலத்தில் 21 மூட்டை ( 80 சிலோ மூட்டை) விளைந்தது. அதாவது 1,680 கிலோ நெல். இதில் 100 கிலோவை அறுவடை செய்தவங்களுக்கு கூலியாக கொடுத்துவிட்டேன். விதை நெல்லுக்காக  120 கிலோ நெல்லை இருப்பு வைத்திருக்கிறேன். 160 கிலோவை விதை நெல்லுக்காக கிலோ 25 ரூபாய் வீதம் விற்றுவிட்டேன். மீதி, 1300 கிலோ நெல்லை, அரிசியாக்கியதில் 650 கிலோ கிடைத்தது. வீட்டுத் தேவைக்கு 300 கிலோ அரிசியை வைத்துக் கொண்டு மீதியை, கிலோ 70 ரூபாய் விலையில் விற்றுவிட்டேன். ஆக மொத்தத்தில் அரை ஏக்கரில் செலவு போக 40 ஆயிரத்திற்கும் மேல் லபாம் கிடைத்தது.
பொதுவாக நெல் சாகுபடி நஷ்டம் என்று சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நெல் சாகுபடி லாபமாகத்தான் இருக்கு. இது என்னோட அனுபவத்தில் பார்த்த உண்மை என்றார் அருண்.
அடுத்ததாக, பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல்லை நடவு போட்டு, இதே மாதிரி விளைச்சல் எடுக்கணும் என்று தயார் பண்ணிட்டு இருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் ரசாயன ஆதரவாளர்களுக்கு நான் விடும் ஒரே கோரிக்கை .. நவீன ரக நெல்லைப் போல் பாரம்பரிய நெல் விளையாது என்று தயவு செய்து பொய் பிரச்சாரத்தை செய்யாதீர்கள் என்றார்.
தொடர்புக்கு
அருண், செல்போன் : 98653 19772.



10.6.12
மண்ணின் வளம், தட்ப வெப்பம், அங்கு விளையும் தீவனங்கள் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்ட இன மாடுகளை, நம் முன்னோர் வகைப்படுத்தி வளர்த்து வந்தார்கள். அந்தந்த மாடுகள் வளரும் பகுதிகளை வைத்தே காங்கேயம், மணப்பாறை, உம்பளாச்சேரி என பெயரிட்டு அழைத்தார்கள்! ஆனால், கலப்பின மாடுகளின் வருகைக்கு பிறகு, பாரம்பரிய இனங்களுக்கு கலப்பினக் காளைகளின் உறைவிந்து செலுத்தப்பட்டு பாரம்பரிய இனங்களின் தனித்துவம்.. அழிய ஆரம்பித்துவிட்டது. இத்தகையக் கொடுஞ் சூழலிலும்.. பாரம்பரிய இனங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வரும் விவசாயிகள் தமிழகம் முழுக்கவே ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், காவிரி டெல்டா பகுதியின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான ‘உம்பளாச்சேரி’ இன மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கி, பாதுகாத்து வருகிறார்கள் நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களின் எல்லையோரத்திலுள்ள உம்பளாச்சேரி, கொருக்கை கிராம மக்கள். உம்பளாச்சேரி மாடுகளின் மகத்துவத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால், அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சென்று, இந்த இனத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வரும் இப்பகுதி விவசாயிகள், பெரும்பாலும் உம்பளாச்சேரி ரக மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இப்படித்தான் இருக்கும் உம்பளாச்சேரி!
இதைப் பற்றி பெருமையோடு பேசிய, ‘உம்பளாச்சேரி பாரம்பரிய கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் தீனதயாளன், இந்த பகுதியில் இயற்கையாகவே ‘உப்பளப்புல்’ என்ற  ஒரு வகையான புல் அதிகமாக வளர்ந்திருக்கும். இதை ‘உப்பள் அருகு’ என்று சொல்லுவாங்க. இதுதான் மருவி உப்பளச் சேரி என்று மாறி .. கடைசியில் ‘உம்பளாச்சேரி’ என்று வந்து நிற்கிறது. அதுவே எங்க ஊருக்கும், இந்த பகுதி மாட்டிற்கும் பெயராகிவிட்டது. இந்த மாடுகளை, தெற்கத்தி மாடு, மோழை மாடு, மொட்டை மாடு, தஞ்சாவூர் மாடு எனும் பல பெயர்களில் சொல்லுவாங்க. நெத்தி வெள்ளை, வால்வெள்ளை, கால் வெள்ளை என்பதுதான் இந்த மாடுகளோட அடையாளம். அதாவது.. நெற்றியில் வெள்ளை கலரில் நட்சத்திர வடிவம் இருக்கும். வாலோட நுனிப்பகுதி முழுசுமாகவோ, ஒரு பகுதி மட்டுமோ... நல்ல வெள்ளை கலரில் இருக்கும். காலில் குளம்பிற்கு மேலே வெள்ளை நிறத்தில் வளைய அடையாளம் இருக்கும். குட்டையான, கூர்மையான கொம்பு, குட்டையாக படுக்கை வசமான காது மடல், சின்னதாக அழகாக இருக்கும் அலை தாடி, குட்டையாக இருந்தாலும் பலமாயிருக்கும் கால்கள், சின்னக் குளம்பு, குட்டையான வால், சின்னதாக அதிக இடைவெளியில் இருக்கும் பால் காம்பு, இதுதான் ஒரிஜினல் உம்பளாச்சேரி மாடுகளின் அடையாளம் என நுட்பமாக பட்டியலிடும் தீனதயாளனிடம் 25 உம்பளாச்சேரி மாடுகள் இருக்கின்றன.

தீவனச்செலவே இல்லை!
இதே சங்கத்தைச் சேர்ந்த கொருக்கை பகுதிக்கான தலைவர் ஜானகிராமன், உம்பளாச்சேரி இன மாடுகளுக்குள்ளேயே ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, கணபதியான் மாடு என்று பல உட்பிரிவு இருக்கு. ஆனால்.. இப்ப எங்களால் அதை தெளிவாக அடையாளப்படுத்திச் சொல் முடியவில்லை. இந்த மாடுகளுக்கு தீவனச் செலவே கிடையாது. முழுக்க முழுக்க மேய்ச்சல் மட்டும்தான். ஆனாலும் கூட, மனசு கேக்காமல், தினமும் ஒரு மாட்டுக்கு 2 கிலோ தவிடும், அரைக்கட்டு வைக்கோலும் கொடுப்போம். அதிக நோய் எதிர்ப்பு சக்தி, சோர்வு இல்லாத உழைப்பும்தான் இந்த மாடுகளோட சிறப்பு. டெல்டா பகுதியோட சேறு பத்தி சொல்லவே வேணாம். அப்படிப்பட்ட சேத்தில் தொடர்ந்து 8 மணிநேரம் ஏர் பூட்டி உழுதாலும்.. சோர்வில்லாமல் இருக்கும். இதோட கால் குளம்பு, குதிரையோட குளம்பு போலவே இருக்கும். கால தரையில் வைத்து இழுக்காமல் தூக்கி வைத்து நடக்கும். கிடேரிக் கன்னுகளை 3 வயதில் பருவத்திற்கு வரும். சினை பிடித்ததிலிருந்து 281 – ம் நாள் கன்னு ஈனும். ஒரு பசு... சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனும். தினமும் இரண்டரை லிட்டர் பால் கொடுக்கும். இதில் சத்து அதிகம். 9 லிருந்து 12 மாதம் வரைக்கும் கறவை இருக்கும்.

கோடையில் பராமரிக்கும் கோனார்கள்!
இந்தப் பகுதியில் கிடை சேர்க்கும் கோனார்கள் இருக்காங்க. கோடைக் காலத்தில் பசுந்தீவனம், தண்ணீருக்கு தட்டுப்படாக இருக்கும். அந்த நேரத்தில் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விவசாயிங்க  கஷ்டப்படுவாங்க. அவங்களுக்கு உதவுறதுதான் கோனார்களோட வேலை. தை, மாசியில் நெல் அறுவடை முடிந்ததும், மாடுகளை கோனார்கிட்ட ஒப்படைச்சுட்டால், அவங்க மேய்ச்சி, முறையாக பராமரித்து, கிடைக்கு பயன்படுத்திட்டு.. வைகாசி மாதம் திரும்ப உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவாங்க. இதற்கு ஒரு மாட்டுக்கு கூலியாக 100 ரூபாய் கொடுத்தால் போதும்.எல்லா மாடுகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு கிடையா மேய்ப்பாங்க. ஒரு கிடையில் சுமாராக 500 பசு  மாடுங்களும்.. 2 பொலிக்காளைங்களும் இருக்கும். மேய்ச்சலுக்குப் போகும் போது கிடையில் இரக்கும் காளைகளோட, இணைந்து, பசு மாடுகள் சினை ஆயிடும். பொதுவாக இந்தப் பகுதியில் சாகுபடிக்கு முன்ன கோனார்க்கிட்ட சொல்லி நிலத்தில் கிடை போடுவாங்க. உள்நாட்டில் இருக்கும் நாட்டு இன மாடுகளிலேயே, இந்த உம்பளாச்சேரி மாடுகளோட கழிவில் நல்லது செய்யும் பாக்டீரியா அதிகமாக இருக்குனு சொல்றாங்க. அதனால், மண்ணுக்கு நிறைய சத்து கிடைக்கிறது. ஒரு ஏக்கர் நில்திற்கு, ஒரு நாளைக்கு கிடை போட, 1,600 ரூபாய் கொடுக்கணும். இதன் மூலமாக கோனார்களுக்கும் வருமானம் வந்துவிடும்.

100% மானியத்தில் மாடுகள்!
இந்த இன மாடுகளோட, வேற இனங்களை கலந்துடாக்கூடாது என்பதில் எங்க சங்கம் மிகவும் கவனமாக இருக்கு. இந்த பகுதிகளில் இருக்கும் உம்பளாச்சேரி மாடுகளுக்கு இதே இன மாடுகளோட உறைவிந்தைத்தான் செலுத்தணும் என்று கலெக்டர், முதலமைச்சர்கிட்ட கோரிக்கை வைத்து, வெற்றி அடைந்திருக்கோம்.எங்க சங்கத்தோட முயற்சியால், விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உம்பளாச்சேரி மாடுகளை வாங்கி கொடுத்து இருக்கோம். உம்பளாச்சேரியில் மட்டுமே சுமார் 2 ஆயிரம் மாடுகளும், கொருக்கையில் ஆயிரம் மாடுகளுக்கு மேலையும் இருக்கு. இன்னும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பல ஆயிரம் மாடுகள் இருக்கு. இதை பல லட்சமாக பெருக்கணும் என்பதுதான் எங்க லட்சியம். அதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக செய்துகிட்டு இருக்கோம் என்றார் ஜானகிராமன்.
தொடர்புக்கு
ஜானகிராமன், செல்போன் : 93454 - 48550

அசத்தல் ஆர்கானிக் பால்... ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்

10.6.12
உலகத்திலேயே உயர்வானது உழவுத் தொழில்.. வேறெந்தத் தொழிலும் கிடைக்காத ஆத்ம திருப்தி, இதில்தான் கிடைக்கிறது. கட்சி வேலைகளுக்காக மாதத்தில் இருபது நாளைக்கும் மேல் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும்.. பண்ணைக்கு வந்தவுடனே அத்தனைச் சோர்வும் காணாமல் போய்விடம். இந்தத் தோட்டம்தான் எனக்கான இளைப்பாறும் இடம். என்னைத் தயார்படுத்தும் இடமும் இதுதான் என்று சிலாகித்துச் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் பாரதீய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரும், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான ஹெச. ராஜா. காரைக்குடி அருகே, கண்டனூர் கிராமத்தில் உள்ளது இவரது, ஼லலித் ராஜ் கார்டன்.
இங்கு, இயற்கை விவசாயம் செய்வதோடு, பால் பண்ணை அமைத்து, பாலை நேரடி விற்பனையும் செய்து வருகிறார், ராஜா. எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே.. எங்க குடும்பத்தில் மாடு வளர்த்தாங்க. 1970 களில் எங்க வீட்டில் 25 மாடுகளுக்கும் மேல் இருந்தது. எல்லாமே உள்நாட்டு கலப்பின மாடுகள். அப்ப இருந்தே மாடுகள் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு. அதற்கு பிறகு, ஜெர்சி, சிந்தி கலப்பின மாடுகள் எல்லாம் வந்த பிறகு, நிறையப் பேர் பால் மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சாங்க. ஆனால், இந்த மாடுகளைப் பராமரிக்கிறது, பெரிய வேலை. அதனால் நாங்க மாடுகளை எல்லாம் விற்றுவிட்டோம்.

வித விதமாக வாழை!
நான் கி.ஏ.முடித்துவிட்டு வந்த பிறகு, மறுபடியும் பால் மாடுகளை வளர்க்கலாம் என்று முடிவு செய்து, இந்த இடத்தை வாங்கினேன். இது மொத்தம் நான்கரை ஏக்கர். இங்க கால் ஏக்கரில் எலக்கி, மட்டி, பூவன், கற்பாரவள்ளி, உதயன், ரஸ்தாளி, செவ்வாழை, நாடு என்று பல வகையான வாழை இருக்கு. விளைவதெல்லாம் வீட்டிற்குத்தான். இரண்டரை ஏக்கரில் கோ – 3, கேரு4, தீவனப்புல் இருக்கு. மீதி இடத்தில் பணியாளர்களுக்கான வீடு, பண்ணை வீடு, மாட்டுக் கொட்டகை, மண்புழு உரக் கொட்டகை எல்லாம் இருக்கு.

நேரடி விற்பனைதான் நல்லது!
இந்த நான்கரை ஏக்கரில் ஒழுங்காக உழைத்தாலே... மாதம் 50 ஆயிரம் ரூபாயை சுலபமாக சம்பாதிக்க முடியும். ஆனால், இன்றைக்கு நிலைமையில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிஙக், கட்டுப்படியான விலை கிடைக்காமல் கஷ்டத்தில்தான் இருக்காங்க. நேரடியாக விற்காமல், சொசைட்டிக்கும், தனியாருக்கும் பால் ஊத்திக்கிட்டு இருந்தால், உழைப்பதற்கான கூலிதான் மிஞ்சும். ஆனால், இதைத்தான் நிறைய பேர் லாபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய ஆகும் செலவு, வேலை பார்ப்பதற்கான கூலி, இரண்டையும் கூட்டி, பால் விற்கும் விலையில் கழித்து பார்த்தால் உண்மை புரியும். என்றைக்கு நாமாக நேரடியாக விற்பனை செய்கிறோமோ அன்றுதான் உரிய லாபம் கிடைக்கும். இது எல்லாருக்கும் சாத்தியமா என்று சிலர் கேப்பாங்க.. கொஞ்சம் மெனக்கெட்டால் எல்லாருக்கும் இது நிச்சயம் சாத்தியம்தான். கூடுதல் லாபம் கிடைக்கணும் என்றால், கூடுதலாக கொஞ்சம் நேரத்தை செலவு செய்யதான் வேண்டும்.

லிட்டர் 30 ரூபாய்!
இதைப் புரிந்துக் கொண்டதால்தான் நான் நேரடியாக விற்பனையில் இறங்கினேன். பாலை சப்ளை பண்றதுக்காக தனியாக ஆளுங்களை வைத்திருக்கிறேன். பாலில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஊற்றாமல், அப்படியே பாக்கெட் போட்டு, லிட்டர் 30 ரூபாய் என்று காரைக்குடியில் வீடுகளுக்கு நேரடியாக கொடுக்கிறோம். அங்க, எங்க பாலுக்கு எப்பவுமே டிமாண்ட்தான்.

5 லட்சம் முதலீடு!
2004 – ம் வருடம் இந்தப் பண்ணையை ஆரம்பித்தேன். ஒரு மாட்டுக்கு 10 அடிக்கு 4 அடி இடம் என்ற  கணக்கில், 64 மாடுகளுக்குத் தேவையான அளவிற்கு, கொட்டகை போட்டிருக்கிறேன். நல்ல காற்றோட்டம் இருக்கும் மாதிரி, தென்னை ஓலையாலதான் கூரை. நான் வாங்கினப் போது, மாடுகளோட விலை மிகவும் குறைவுதான். கொட்டகை, 64 மாடுகள் எல்லாம் சேர்த்து மொத்தம் 5 லட்ச ரூபாய் செலவானது. மாடுகளைப் பராமரிப்பதற்காக இரண்டு குடும்பங்களை வேலைக்கு வைத்திருக்கிறேன். நான் ஊரில் இருந்தால், காலையில் ஆறு மணிக்கெல்லாம் பண்ணைக்கு வந்துவிடுவேன். வெளியூர்  போனாலும், திரும்பி வரும்போது பண்ணைக்கு ஒரு எட்டு வந்துவிட்டுத்தான் வீட்டுக்கே போவேன்.

மாதத்தில் ஒரு நாள் குடும்பத்தோட வந்து பண்ணையில் தங்கிவிடுவோம். எங்க குடும்பத்து ஆளுங்களே எல்லா வேலையும் பார்ப்போம். நான் பால் கறப்பேன். சாணி எடுப்பேன், மாடுகளைக் குளிப்பாட்டுவேன். நாம் ஒரு விஷயத்தை முழுவதாக தெரிந்துக் கொண்டால்தான்.. அதில் நடக்கும் தப்பைக் கண்டுபிடிக்க முடியும். நிறைய பேர் பண்ணையை வைத்துக் காண்டு வெள்ளையும், சொள்ளையுமாக வந்து, போயிட்டு இருப்பாங்க. அங்க கண்டிப்பாக நஷ்டம்தான் வரும். நம்முடைய முழு ஈடுபாடு இல்லாத தொழில், நிச்சயம் ஜெயிக்காது.

13 மாதத்திற்கு ஒரு கன்று!
ஒரு கிலோ தீவனம் கொடுத்தால்.. மாடு இரண்டு லிட்டர் பால் கொடுக்கும் இதுதான் கணக்கு. நான் கம்பெனி தீவனத்தைத்தான் வாங்கிப் போடுறேன். பால் மாட்டுக்கு பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம் என்று எல்லாவற்றையும் குறிப்பிட்ட அளவில் கொடுக்கணும். அப்போதுதான் சீரான பால் உற்பத்தி இருக்கும். நான் ஒரு மாட்டிற்கு 20 கிலோ பசுந்தீவனம் (கோ -4), 5 கிலோ அடர் தீவனம் என்று கொடுக்கிறேன். முறையாக தீவனம் போட்டுப் பராமரித்தால்... 13 மாதத்திற்கு ஒரு கன்று கிடைத்துவிடும்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்!
இப்போது பண்ணையில் மொத்தம் 45 மாடுகள் இருக்கு. எல்லாமே ஹெச்.எஃப், ஜெர்சி கலப்பின மாடுகள்தான். ஒரு நாளைக்கு ஒரு மாடு 20 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. கறவையில்லாத காலத்தையெல்லாம் கழித்துவிட்டு கணக்கு போடும்போது ஒரு மாடு ஒரு வருடத்தில் 2 ஆயிரத்து 520 லிட்டர் பால் கொடுக்கும். எப்பவும் 40 மாடுகள் கறவையில் இருப்பதால்.. வருடத்திற்கு 1 லட்சத்து 800 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. சராசரியாக ஒரு லட்சம் லிட்டர் என்று வைத்துக் கொள்ளலாம். தீவனம், பராமரிப்பு, வேலையாட்கள் கூலி என்று ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 20 ரூபாய் செலவு. நேரடி விற்பனைக்கான செலவு, லிட்டருக்கு 5 ரூபாய். ஒரு லிட்டர் பால் முப்பது ரூபாய் என்று விற்கும்போது, ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் லாபம். ஆக, வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.

மண்புழு உரத்திலும் மகத்தான லாபம்!
இதுபோக, மாதத்திற்கு ஒரு டன் சாணி கிடைக்கிறது. அதை வைத்து மண்புழு உரம் தயார் செய்து கொண்டிருக்கிறேன். எங்க தோட்ட பயன்பாட்டுக்குப் போக மீதியை, கிலோ 6 ரூபாய் என்று விற்கிறேன். அக்கம்பக்கத்து விவசாயிகள், நர்சரி பண்ணை வைத்திருப்பவர்களெல்லாம் வாங்கி கொண்டு போறாங்க. அந்த வகையில் வருடத்திற்கு 10 டன் மண்புழு உரம் விற்பனையாகிறது. தனியாக மெனக்டொமலே கூடுதல் வருமானம் கிடைக்கிறது.என்னைப் பொறுத்தவரைக்கும், 10 பால் மாடுகளைக் குடும்பத்தில் ஒரு ஆள் பராமரித்தாலே போதும். ஒரு குடும்பம் எந்தப் பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும் என்றார்.

தொடர்புக்கு
ஹெச்.ராஜா, செல்போன் : 94433 – 65650.

முயல் வளர்ப்பு.. முழுமையாக முயற்சித்தால்.. முத்தான வருமானம்!
10.6.12
இறைச்சிக்கான கால்நடை வளர்ப்புத் தொழிலில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர்  உண்டு. குறிப்பாக, முயல் வளர்ப்பில் இறங்கிய பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், முயல் வளர்ப்பு, என்றாலே பலரும், வேண்டாம் என்றுதான் துள்ளி ஓடுவார்கள் முயலைவிட வேகமாக. ஆனால், இவர்களுக்கு மத்தியில் மிகுந்த முனைப்புடன் முயல் வளர்த்து, அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்த முரளிதரன். எங்கப்பா லேப் டெக்னீசியன் வேலை பார்த்தாலும்.. விவசாயத்தை விடாமல் செய்து கொண்டிருந்தார். அந்த வருமானத்தில்தான் என்னை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். படிப்பை முடித்துவிட்டு,ஹரிகோட்டாவில் இருக்கும் ‘இஸ்ரோ’ நிறுவனத்தில்.. விஞ்ஞானியாக 16 வருடம் வேலை பார்த்தேன்.

பிறகு, சவுதி அரேபியாவில் ஏழு வருடம் வேலை பார்த்தேன் அதன் பிறகு இந்தியாவிற்கே திரும்பிவிட்டேன். மூன்று வருடமாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி கொண்டு வருகிறேன். அதன் மூலமாக, கல்வராயன் மலையில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கு, சில உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு நடுவில் இணையதளம் மூலமாக முயல் வளர்ப்பைப் பற்றித்  தெரிந்து கொண்டேன். அதற்காக, கொடைக்கானலில் இருக்கும் மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி எடுத்து கொண்டேன். ஆரம்பத்தில், 10 முயல்களை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். மூன்று வருடத்தில் 1,500 முயல்கள் கிடைத்தது. அதில் ஆயிரம் முயலை விற்றுவிட்டேன். இப்போது 500 முயல்களை வைத்திருக்கிறேன் என்றார்.

இன விருத்தி அதிகம்!
சாப்பிடும் உணவை, கறியாக மாற்றும் திறனும், இன விருத்தியும்.. மற்ற விலங்குகளை விட முயலுக்கு அதிகம். முயலை நம்ம வசதியைப் பொருத்து, எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வளர்க்கலாம். நான் என்னோட வீட்டைச் சுற்றிக் கூண்டு வைத்து வளர்க்கிறேன். முயல் கறி, சாப்பிட்ட உடனே ஜீரணமாயிடும். இந்தக் கறியில் குறைவான கொழுப்பு, அதிக புரதம், குறைந்த கலோரிதான் இருக்கு. முயல் கறி மிருதுவாக, சுவையாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லோருமே சாப்பிடலாம். இவ்வளவு இருந்தும், யாரும் இந்தத் தொழிலுக்கு வருவதில்லை என்பதுதான் ஆச்சரியம்.

இதை விற்க முடியாது என்றுதான் நிறைய பேர் காரணம் சொல்றாங்க. என்னோட அனுபவத்தில் விற்பனை ஒரு பிரச்சினையே இல்லை. தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு முயல் இல்லை. எந்தப் புதுப்பொருளாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டு ருசி பார்த்தால்தான்.. அடுத்தடுத்து சாப்பிடத் தோன்றும். நம்ம ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி கிடைக்கும் அளவிற்கு முயல் கறி கிடைப்பதில்லை. அதனால் மக்கள் வாங்கி சாப்பிடுவதில்லை. அதில்லாமல், முயல் மென்மையான, சாதுவான பிராணி. அதனால், அதைக் கொன்று சாப்பிடுவது பாவம் என்ற எண்ணமும் இருக்கு. அதனால்தான் பயன்பாடு குறைவாக இருக்கு. விழுப்புரத்தில் ஒரு ஹோட்டலில் நான் ஆர்டர் கேட்ட போது தினம் 5முயல் உங்களால் கொடுக்க முடிந்தால் நாங்க முயல்கறி பிரியாணி போடத் தயார் என்று சொன்னாங்க. ஆனால், அந்தளவிற்கு என்னால் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

விற்பனைக்கு உதவி செய்வேன்!
வளர்ப்புக்கு இனப்பெருக்கத்திற்கு, சோதனைக் கூடங்களுக்கு கறிக்கு என்று பலவகையிலும் முயல்களுக்குத் தேவை இருந்துக் கொண்டுதான் இருக்கு. என்கிட்ட இருக்கும் ஆர்டருக்கே என்னால் சப்ளை செய்ய முடிவதில்லை. முயல் வளர்த்துக் கொண்டு இருப்பவங்களுகத் தேவையான ஆலோசனை கொடுக்கவும், விற்பனை செய்து கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

மூன்று மாதங்களில் 3 கிலோ!
முயலின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இன விருத்திக்காக வளர்க்கும் போது, 5 ஆண்டுகள் வரை வளர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்பிற்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல் 3 கிலோ அளவிற்கு வளரக் கூடியவை.

வலை கவனம்!
கொட்டகைக்கு அதகிச் செலவு செய்யாமல், வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவை. அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக  கூண்டு செய்யாமல், பத்தடி நீளம். நான்கடி அகலம், அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்... செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 ‘கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்கு காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல் தண்ணீருக்கு ‘நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்.. தண்ணீர் வீணாகாது.

ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!
சினை முயல் ஒன்று, பருவத்திற்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களை கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும் போது, வளர்ப்பு நிலை தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த முறையில் வளர்க்கும் போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!
முயல், ஐந்து மாத வயதில் பருவத்திற்கு வரும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பருவமடைந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பருவத்துக்கு வரும். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும். இன விருத்திக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.ஆணுடன் சேர்ந்த 15 நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவி பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு 8 முறை குட்டி!
குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகி விடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும். அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை 60 கிராம் இருக்கும். குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்து விட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவிற்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவிற்கு எடை வந்துவிடும்.

பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!
முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம். பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வெண்டும். முயல்கள் பகல்வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு 210 முயல்கள்!
ஒவ்வொரு முயலும் சராசரியாக வருடத்திற்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியாக 5 குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட்டில் இருக்கும்  ஏழு பெண் முயல்கள் மூலமாக வருடத்திற்கு 210 குட்டிகள் கிடைக்கும். நான்கு மாதம் கழித்து விற்கும்போது, ஒரு முயல் சராசரியாக இரண்டு கிலோ இருக்கும். சராசரியாக ஒரு கிலோவிற்கு 175 ரூபாய் விலை கிடைக்கிறது. ஒரு முயல் 350 ரூபாய் என்று 210 முயல்களையும் விற்கும்போது.. 73 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், தீவனம், மருத்துவச் செலவு, பராமரிப்புக்கு 52 ஆயிரத்து 800 ரூபாய் போக 20 ஆயிரத்து 700 ரூபாய் லாபம். இது, பத்து முயல்கள்  அடங்கிய  ஒரு யூனிட்டிற்கான கணக்கு. ஆடு கோழி வளர்ப்பைவிட இதில் லாபம் குறைவாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இதில் பராமரிப்பு குறைவு. அதாவது, இதற்காக நீங்க செலவிடும் நேரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். பகுதி நேர வேலையாகவே இதைச் செய்யலாம். அதேபோல் நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.

5 யூனிட்டால்... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினால், வருடத்திற்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும். சினை முயலாக விற்றால், ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு விற்றால், ஒரு முயலை 1,500 ரூபாய் வரைக்கும்கூட  விற்க முடியும் என்றார்.

இப்படித்தான் அடர்தீவனம் தயாரிக்கணும்.
மக்காச்சோளம் – 20 கிலோ, கம்பு – 15 கிலோ, கேழ்வரகு – 3 கிலோ, அரிசி – 15 கிலோ, கோதுமை தவிடு – 12 கிலோ, கடலைப்பொட்டு – 20 கிலோ, தாது உப்பு ஒன்றரை கிலோ, உப்பு  அரைகிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைப்பதற்கு 12 மணி நேரம் முன்பு 13 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்கு கொடுக்க வேண்டும். இது 100 கிலோ தீவனம் தயாரிப்பதற்கான உதாரண அளவு. எவ்வளவு முயல் இருக்கின்றனவோ.. அதற்கு எற்ற அளவில் தீவனததைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

முயல் கறியில் உள்ள சத்துக்கள்!
புரதம் - 21%, கொழுப்பு - 11%, நீர்ச்சத்து -68%. 100 கிராம் கறியில்.. 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன.
10 முயல்கள் வளர்க்க முரளிதரன் சொல்லும் ஒரு வருடத்திற்கான செலவு – வரவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
நிரந்தரச் செலவுகள் (5 ஆண்டுகளுக்கு)
தாய் முயல்
10,000

கூண்டு
8,000

மொத்தம்
18,000

நடைமுறைச் செலவுகள்


அடர் தீவனம்
44,900

பசுந்தீவனம்
2,600

மருத்துவச் செலவு
5,300

முயல் விற்பனை மூலம் வரவு

73,500
மொத்தம்
52,800
73,500
நிகர லாபம்

20,700
தொடர்புக்கு

முரளிதரன், செல்போன் :94431 82960
செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையம், கொடைக்கானல் : 04542 -276414
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் : 044 - 27452371

ஏற்றம் கொடுக்கும் எருமைகள்.. ஆண்டுக்கு மூன்று லட்சம்!

25.4.12
ஊருக்குள் நுழைந்து, எருமை மாடு வளர்க்கிறார் என்று ஆரம்பித்தாலே சிறு குழந்தைகள் கூட அடையாளம் காட்டிவிடுகின்றனர், ஸ்டீபனின் எருமைப் பண்ணையை! அந்தளவிற்கு தஞ்சாவூர்  மாவட்டம், திருவையாறு, காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்டீபனின் பால் பண்ணை ஏக பிரபலாம். பண்ணையை நெருங்கும் போதே, ஏ மேனகா.. இந்தப்பக்கம் வந்து நில்லு. ராஜகுமாரி .. நீ தண்ணீர் குடிக்க மாட்டியா? என்று பாலர் பள்ளிக்கூடத்தில் கேட்பது போன்ற செல்ல அதட்டல்கள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ஸ்டீபன். எருமைகள் நம்ம சொல்லிற்கு கட்டுப்படாது. வளர்ப்பது சிரமம் என்று  சொல்வார்கள். ஆனால், அதெல்லாம் தப்பான கருத்து. நாம் நன்றாக பழகினால் எல்லா பிராணிகளும் நன்றாகவே பழகும். அதற்கு எருமைகளும் விதிவிலக்கல்ல என்றார் ஸ்டீபன்.

அன்று மூன்று மாடுகள் ! இன்று 31 மாடுகள்!
1998ம் வருடம், கறவையிலிருக்கும் நாட்டு எருமைகள் கன்னுக்குட்டிகளோட  வாங்கினேன். நான் வாங்கியது மூன்று மாடுகள. அதிலிருந்து பெருகி, இப்போது 17 கிடேரி எருமை, 8 கிடேரி கன்னுக்குட்டி, 6 கிடா கன்னுக்குட்டிகள் என்று மொத்தம் 31 உருப்படிகள் இருக்கு.

சுத்தம் அவசியம் !
எங்க பண்ணையை எப்பவும் சுத்தமாக இருக்கிற மாதிரி பார்த்துக்குவோம். முழுமையாக மேய்ச்சல் மூலமாகத்தான் மாடுகளை வளர்க்கிறோம். அதனால், எல்லா மாடுகளுமே நோய் நொடி இல்லாமல் நன்றாக இருப்பதோடு பராமரிப்புச் செலவும் குறைகிறது.

கொட்டகை இருந்தால் ஆரோக்கியம் !
பொதுவாக எருமை மாடுகளை திறந்த வெளியில்தான் கட்டி வைப்பாங்க. நாங்க கொட்டகை போட்டுதான் வளர்க்கிறோம். அப்போதுதான் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். 40 அடி நீளம், 30 அடி அகலம், 14 அடி உயரத்தில் கொட்டகை போட்டிருக்கிறோம். கொசு, ஈ மாதிரியான பூச்சிகள்கிட்டயிருந்து காப்பத்தருதுக்காக தினமும் ராத்திரியில் கரனட்டில் இயங்கும் கொசு விரட்டிகளை போட்டு வைப்போம்.

மேய்ச்சல் முறையில் செலவு குறைவு!
தினமும் காலையில் ஆறு மணிக்குள் பாலைக் கறந்துவிடுவோம். ஏழு மணியிலிருந்து மதியம் பன்னிரண்டு மணி வரைக்கும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். வெயில் ஏறிடுச்சுனா.. பக்கத்தில் இருக்கும் குளத்திற்குள் இறக்கி விட்டுவிடுவோம். திரும்ப மூன்று மணிக்கு பண்ணைக்கு அழைச்சுட்டு வந்து பால் கறந்துவிட்டு திரும்பவும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். பொழுது சாய்ந்த பிறகு பண்ணைக்கு அழைச்சுட்டு வந்து, குழாயில் தண்ணியைப் பீய்ச்சி அடித்து மாடுகளைச் சுத்தப்படுத்தி கொட்டகையில் கட்டிடுவோம். கோதுமைத் தவிடை ஊற வைத்து பருத்திக் கொட்டையைக் கலந்து வைத்துவிடுவோம். முழு மேய்ச்சல் என்பதால் தீவனச் செலவும் மிகவும் குறைவுதான். ஆரம்பத்தில் நான் வாங்கின மாடுகளில் இரண்டு மாடுகளுக்கு கிட்டத்தட்ட 20 வயசு நெருங்கிடுச்சு. இரண்டுமே பதிமூன்று முறை கன்று போட்டிருக்கு. ஆனாலும், அந்த மாடுகள் இன்னமும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. முறையாக பராமரிப்பதுதான் இதற்கு காரணம்.

ஆண்டுக்கு 15,000 லிட்டர் பால்!
காலை... மாலை இரண்டு வேளையும் ஒவ்வொரு லிட்டர் பாலை கன்னுக்குட்டிக்காக விட்டுட்டுத்தான் கறப்போம். ஒரு எருமையில் இருந்து எட்டு மாதம் வரை பால் கிடைக்கும். எட்டு மாதத்தில் ஒரு மாடு மூலமாக 1,000 லிட்டர் வரை கிடைக்கிறது. போன வருடம் என்கிட்டயிருந்த மாடுகள் மூலமாக மொத்தம் 14 ஆயிரம் லிட்டர் கிடைத்தது.
கறவை குறைவதற்கு, முதல் ஈத்து என்று கணக்குப் பார்த்தால், வருடத்திற்கு சராசரியாக எப்படியும் 15 ஆயிரம் லிட்டர் பால் கிடைத்துவிடும். ஒரு லிட்டர் பால் 25 ரூபாய் என்று வைத்து கொண்டால் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமான் கிடைக்கும். தீவனம், பராமரிப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் போ 3 லட்சத்து 25 ஆயிரம் லாபமாக கிடைக்கும். இதில்லாமல் கிடைக்கும் கிடா கன்னுக்குட்டிகளை இரண்டு வயது வரைக்கும் வளர்த்து விற்றுவிடுவோம். ஒரு கிடாவுக்கு, 10 அயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். கிடேரிக் கன்னுகளை நாங்களே வைத்துக் கொள்வோம். மாடுகள் மூலமாக சம்பாதிக்க பணத்தில்.. இப்போது மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கி இருக்கோம். அதில் பசுந்தீவனங்களை சாகுபடி செய்யலாம் என்று இருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று வருடத்திற்குள் பண்ணையில் 100 எருமைகளை நிப்பாட்டணும் என்பது என்னோட இப்போதைய கனவு.

எருமை மாடுகளை வளர்ப்பதற்கு ஸ்டீபன் தரும் ஆலோசனைகள்..
காற்றோட்டம் முக்கியம் : வளர்க்கப் போகும் மாடுகளின் எண்ணிக்கைக்கேற்ற அளவிற்கு கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூரை உயரமாக இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் காற்றோட்டம் இருக்கும். தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய பிறகு கொட்டகைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். காலை சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மாலை மூன்று மணியளவிலும் பாலைக் கறந்துவிட வேண்டும். கன்றுகளுக்கு போதுமான அளவு பால் விட வேண்டியது அவசியம். நீர் நிலைகள் இருக்கும் பகுதியில்தான் மாடுகளை மேய்க்க அனுப்ப வேண்டும். நன்பகல் நேரத்தில் மாடுகளை நீர்நிலைகளில் இறக்கிக் குளிப்பாட்ட வேண்டும்.

வைக்கோல்.. கவனம் : 2 கிலோ பருத்திக்கொட்டையை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, அதனுடன் 10 கிலோ கோதுமைத் தவிடைச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் கொட்டகையில் அடைப்பதற்கு முன், பெரிய மாடுகளுக்கு இந்தக் கலவையில் தினமும் கால் கிலோ அளவிற்க்கு தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். வளரும் கன்றுகளுக்கு 100 கிராம் அளவிற்க்கு கொடுக்க வேண்டும்.
என்னுடைய அனுபவத்தில் எருமைகளுக்கு வைக்கோல் கொடுப்பதைக் காட்டிலும் பசுந்தீவனம் கொடுப்பதுதான் லாபகரமாக இருக்கிறது. நமது வயலில் கிடைக்கும் பட்சத்தில் வேண்டுமானால் வைக்கோல் கொடுப்பதில் தவறில்லை. அப்படிக் கொடுக்கும் போது, கண்டிப்பாக ஈரமான வைக்கோலைக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் பூஞ்சணத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

குறைந்த இடைவெளியில் சினை ஊசி : கிடேரி கன்று இரண்டு வயதில் பருவத்திற்கு வந்துவிடும். அந்த நேரத்தில் சினை ஊசி போட்டால், பத்து மாதங்களில் கன்று ஈன்று விடும். கன்று போட்டதிலிருந்து இருபதாம் நாள் மீண்டும் பருவத்திற்கு வந்து விடும். அதிலிருந்து ஒவ்வொரு இருபதாம் நாளிலும் பருவத்திற்கு வரும். கன்று போட்டதிலிருந்து ஆறு மாதம் வரை காத்திருக்காமல் 2 மாதங்களிலேயே மீண்டும் சினை ஊசி போட்டு விட வேண்டும். அதனால், அடுத்த ஈற்றுக்கான இடைவெளியைக் குறைத்து கூடுதல் லாபம் பார்க்க முடியும். இப்படிச் செய்தால் வருடத்திற்கு ஒரு கன்று கிடைத்துவிடும். ஒவ்வொரு முறையும் கன்று ஈன்ற எட்டு மாதங்கள் வரை பால் கறக்கலாம். கன்ற ஈன்ற மூன்று மாதங்கள் வரை ஒரு மாடு எட்டு லிட்டர் பால் கறக்கும். அதன் பிறகு 5 லிட்டர் வரைதான் பால் கறக்கும்.
கன்றுக்கு, பிறந்த 8,38, 68, 98 – ம் நாட்களில் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். முறையாகப் பராமரித்தால் வேறு நோய்கள் தாக்குவதில்லை. அதனால் மருத்துவச் செலவும் குறைவாகத்தான் இருக்கும்.

தொடர்புக்கு
ஸ்டீபன்
99657-42383

கூலி வேலைக்கு நடுவே குஷியான வருமானம்

10.01.2012.
மனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே, ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள். இதை உணர்ந்தே கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன் என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர். இது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி! சொந்தமாக நிலம் ஏதும் இல்லாத வயது முதிர்ந்த இந்தத் தம்பதியர், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையிலும் தளர்ந்து விடாமல் ஆடு, கோழி, புறா ஆகியவற்றை வளர்த்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

இவருக்கு 71 வயதாகிறது. பூர்வீகம் பாலக்கரை கிராமம். தோட்ட வேலை செய்துதான் பிழைப்பை ஓட்டுகிறார். இவருக்கு புறா வளர்ப்பில் ஆர்வம். நாற்பத்தைந்து வருடமாக புறா வளர்ப்பதாகக் கூறுகிறார். எந்தத் தோட்டத்தில் வேலைக்காக தங்கியிருந்தாலும் புறாவை மட்டும் விடுவதில்லை. கூடவே கூட்டிக் கொண்டு போவதாக கூறுகிறார்.
நான்கு வருடமகத்தான் இந்த தென்னந்தோப்பில் வேலை செய்கிறார்கள். தண்ணிர் பாய்ச்சுவதில், கீழே விழுகிற தேங்காய்களை எடுத்து குவிப்பது போன்ற  வேலைகளை முடித்த பிறகு, மீதியிருக்கற நேரத்தில் புறாவைத்தான் கவனிப்பதாக கூறுகிறார்கள். கூடவே ஆடு, கோழிகளையும் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். பிள்ளைங்களையெல்லாம் கட்டிக் கொடுத்த பிறகு, இப்பவும், பிள்ளைகள் தயவில்லாமல் தாங்களே ஜீவனம் செய்வதற்கு புறா, ஆடு, கோழிகள் தான் உதவிக் கொண்டிருகிறது என்று வேலுச்சாமி, இடைவெளிவிட

இப்பொழுது, இவர்களிடம் 25 ஜோடி புறா, 15 பெட்டை ஆடு, 3 கிடா ஆடு, 6 நாட்டுக்கோழி, 3 சேவல் இருக்கிறது. வயதான காலத்தில் இந்த அளவுக்கு மட்டும்தான் இவர்களால் பராமரிக்க முடியும் என்று கூறுகின்றனர். அதனால் எண்ணிக்கையைக் கூட்டுவதில்லை. அவ்வப்போது விற்று பணமாக்குகிறார்கள். விற்பதற்கும் அலைய வேண்டியதில்லை. இங்கேயே வந்து வாங்குகிறார்கள். சமையல் வேலையை முடிச்சுட்டு பக்கத்தில் இருக்கும் காலி நிலத்திற்கு ஆடுகளை ஓட்டிட்டுப் போயி மேய்ச்சுட்டு வந்துவிடுவதாக தன் பங்கை சொன்னார் செல்லம்மாள்.

புறாக்களின் பங்கு 25 ஆயிரம்
தொடர்ந்த வேலுச்சாமி, கால்நடைகளை வளர்த்து வரும் விதம் மற்றும் வருமானம் பற்றி, பேச ஆரம்பித்தார். கருப்பு, வெள்ளை, சிவப்பு, ரேவல்ஸ், ரோஸ், ரோமர், சங்கிலி என்று நிறைய வகை புறாக்கள் இருக்கிறது. அதை வளர்ப்பது பெரிய வேலையே இல்லை. காலையில் கூண்டைத் திறந்து விட்டால் பறந்து போய் தீவனம் எடுத்துக்கும். சாயங்காலம் வந்து அடையும். அந்த நேரத்தில் ஏதாவது தானியத்தை விசிறி விட்டால் போதும். ஒரு ஜோடிக்கு தினமும் 150 கிராம் தானியம் தேவைப்படும். ராகி, சோளம் என்று எதையாவது கொடுப்போம். இதுங்களால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.

45 நாட்களுக்கு ஒரு முறை புறா அடைக்கு காக்கும். ஒரு முறை அடை இருந்தால் 2 முட்டை. வருடத்துக்கு 16 முட்டை. அதாவது ஒரு ஜோடி மூலமாக வருடத்துக்கு 16 குஞ்சுகள் கிடைக்கும். 25 ஜோடி மூலமாக, வருடத்துக்கு 400 குஞ்சு கிடைக்கும். அவைகளை ஒரு மாதம் வரைக்கும் வளர்த்து விற்றுவிடுவதாக கூறுகிறார். பெரும்பாலும் சாப்பிடத்தான் வாங்கிக் கொண்டு போவார்கள். வளர்ப்புக்கும் கொஞ்ச பேரு வாங்கிகக் கொண்டு போவதாக கூறுகிறார். ஒரு மாத வயதில் ஒரு புறா குஞ்சை 100 ரூபாய்க்கு விக்கிறார்கள். தனாகவே இறந்துபோனது சமைக்கறதுக்காக இவர்கள் அடுத்துக் கொண்டு இதையெல்லாம் கழித்துவிட்டால் வருடத்துற்கு 250 குஞ்சுகள் விற்க முடியும். இதன் மூலமாக 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

கோழிகளின் கொடை 27 ஆயிரம்
ஒரு கோழியிலிருந்து வருடத்துக்கு 40 முட்டை என்று ஆறு கோழியிலிருந்து மொத்தம் 240 முட்டை கிடைக்கிறது. அதில் இவர்கள் சாப்பிட்டது போக, மீதம் உள்ளதை  அடைக்கு வெக்கிறார்கள் . சேதாரமெல்லாம் போக, வருடத்துக்கு 180 குஞ்சு கிடைக்கும். 2 மாதம் வரை வளர்த்து, ஒரு குஞ்சு 150 ரூபாய் என்று விற்கிறார்கள் . நல்ல சேவல்  குஞ்சு கிடைத்து, அதை இரண்டு வருடம் வளர்த்து விற்றால்  ஒரு சேவல் 4 ஆயிரம் ரூபாய்க்குக் கூடப் போகும். எப்படிப் பாத்தாலும் கோழி மூலமாக வருஷத்துக்கு 27 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கிறது. தீவனச்செலவும் பெரிதாக கிடையாது. தோட்டத்திலேயே மேய்ந்து புழு, பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்ட்டுக் கொள்ளும் . சாயங்காலம் அடையும்பொழுது மட்டும் கொஞ்சம் தானியம் போடுவதாக கூறுகிறார்.

ஆடுகளின் அன்பளிப்பு 90 ஆயிரம்
அதே மாதிரிதான் நாட்டு ஆடுகளும். அவற்றிற்குத்  தனியாக தீவனச் செலவே கிடையாது. மேய்ந்துவிட்டு வரும்பொழுது பக்கத்தில் இருக்குற செடி, கொடிகளில் இருந்து தழை ஒடிச்சுட்டு வந்து போட்டுவிடுகிறார்கள். 15 பெட்டை மூலமாக, வருடத்துக்கு 45 குட்டி கிடைக்கும். குட்டிகளை இரண்டு மாதம் வளர்த்து, ஒரு குட்டி 2 ஆயிரம் ரூபாய் என்று விற்கிறார்கள். ஆடுகள் மூலமாக வருடத்திக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆடு, கோழி, புறா என்று எல்லாம் சேர்த்து வருடத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். தீவனச் செலவெல்லாம் போக எப்படியும் வருடத்துக்கு 1 லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைக்கும் என்ற வேலுச்சாமி, ஆடு, புறா, கோழி இவற்றையெல்லாம் தனி வேலையாக எடுத்துச் செய்யாமல், தோட்டத்து வேலை போக கிடைக்கிற இடைவெளியிலதான் செய்வதாக கூறுகிறார். அதனால், இந்த வருமானமே தங்களுக்கு  பெரிய வருமானம்தான்- அதுவும் இந்த 71 வயதில்  என்று மன நிறைவோடு கூறுகிறார்.

தொடர்புக்கு
044-42890002 என்ற எண்ணுக்கு போன் செய்து பதிவு செய்யுங்கள்
ஆதாரம் : பசுமை விகடன் 10.01.2012.

ஆடு +தென்னை +மா, அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !

பறக்கப் பறக்கத்தான் இறகுகள் பலப்படும். உழைக்க உழைக்கத்தான் உயர்வுகள் உனதாகும்' அந்த ஆட்டுப் பண்ணையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தன்னம்பிக்கை வாசகம், அங்கே நுழையும் அனைவரையும் ஈர்க்கிறது. பண்ணையின் உரிமையாளர்களான வாசுதேவன்-கவிதா தம்பதி, அந்த வாசகங்களுக்கு உதாரணமாகவும் நின்று கொண்டிருப்பது, அனைவரையும் வியக்க வைக்கிறது!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தேவிநாயக்கன்பட்டியில் இருக்கிறது, இந்தத் தம்பதிக்குச் சொந்தமான 'அருவங்காடு தோட்டம்’. ஒருபுறம் தென்னந்தோப்பு... மறுபுறம் மாந்தோப்பு. அவற்றுக்கிடையேதான்  பிரமாண்டமாய் நீள நீளமான பரண் அமைப்பிலான இரண்டு கொட்டில்கள். அவற்றின் நடுவே, தீவனம் அரைக்கும் இயந்திரம், பசுந்தீவனம் வெட்டும் இயந்திரம்... என ஒரு தொழிற்சாலை கணக்காக காட்சியளிக்கிறது, அவர்களுடைய 'வீரா ஆட்டுப்பண்ணை’!

கை கொடுக்கும் பசுமை விகடன்!
''முதல் புத்தகத்திலிருந்து இப்ப வரைக்கும் ஒன்று விடாமல் அத்தனை 'பசுமை விகடன்’ புத்தகங்களையும் நாங்க சேர்த்து வைத்திருக்கோங்க. அதைப் படித்துதான் 'கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை’ பற்றித் தெரிந்துக் கொண்டோம். இந்த இடத்தில் பரம்பரை பரம்பரையாக பண்ணையம் பண்ணிக்கிட்டிருக்கோம். தாத்தா, வீரப்ப கவுண்டர், அந்தக் காலத்திலேயே நூறு செம்மறி ஆடு, ஐம்பது வெள்ளாடு, ஐம்பது பால் மாடு என்ற வைத்து பண்ணையம் பண்ணிக்கிட்டிருந்தார்.

துவள வைத்த வேலையாள் பிரச்னை!
காலப்போக்கில்... கொஞ்சம் கொஞ்சமாக அதையெல்லாம் குறைச்சுக்கிட்டு, வீட்டுத்தேவைக்கு மட்டும் கால்நடைகளை வளர்த்துக்கிட்டிருந்தோம். நான் விவசாயத்துக்கு வந்து இருபத்தி மூன்று வருடம் ஆச்சு.
ஆரம்ப காலத்தில் வேலைக்கு ஆளுங்களைக் கூட்டிட்டு வருவது குதிரைக் கொம்பாக இருந்தது. ராத்திரியே டிராக்டரை எடுத்துக்கிட்டுப் போய் காத்துக் கிடந்து விடியற்காலை ஆளுங்களை ஏற்றிகொண்டு வரணும். 'காலையில் போயிக்கலாம்' என்று கொஞ்சம் தயங்கினால்... அவ்வளவுதான், வேற தோட்டத்துக்கு வேலைக்குப் போயிடுவாங்க.

இந்தப் பிரச்னையா்ல... ஒரு கட்டத்துல நான் ரொம்பவே நொந்துட்டேன். 'இனிமே நமக்கு இந்தப் பிஞ்சு வெள்ளாமை ஆகாது’ என்று மொத்தத்தில் தென்னை, மாமரம் இது இரண்டையும் வைத்துவிட்டேன். தென்னைக்கு இப்போ இருபது வயசாகிறது. மாமரத்துக்கு பதினைந்து வயசாகிறது. நடவு செய்ததிலிருந்து அந்த மரங்களுக்கு இதுவரை துளிகூட ரசாயனம் போட்டதில்லை. முழுக்க இயற்கை விவசாயம்தான். தொழுவுரம், ஆட்டுப்புழுக்கை, கொழிஞ்சினுதான் கொடுப்போம்.

பண்ணையிலேயே இருக்கணும் தொழுவுரம்!
பத்து ஏக்கர்ல 500 மாவும், 16 ஏக்கர்ல 1,000 தென்னையும் இருக்கு. அதுபோக கொஞ்சம் தரிசும் இருக்கு. இந்த மரங்களுக்கு வெளியில இருந்துதான் ஆட்டுப்புழுக்கையையும், தொழுவுரத்தையும் வாங்கிட்டு இருந்தோம். அதுக்குப் பெரிய டிமாண்டு. முதல் நாள் போய் நாம ஒரு ரேட் பேசி வைத்துவிட்டு மறு நாள் வண்டியோட போனால்... 'ஐம்பது, நூறு ரூபா அதிகமா கிடைக்குது’ என்று வேற ஆளுக்கு வித்துருப்பாங்க. 'அது சரிப்பட்டு வராது’ என்று தொழுவுரமும் நம்ம பண்ணையிலேயே இருக்கணும்னுதான் ஆட்டுப்பண்ணை வைக்கும் ஐடியா வந்தது.

திண்டுக்கல்லில் இருக்கும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின்  பேராசிரியர் பீர்முகமதுவைப் பார்த்து யோசனை கேட்டப்போதுதான் 'பரண் மேல் ஆடு’ முறை பற்றி சொன்னார். அதோட, 'பசுமை விகடனில் வந்திருந்த இரண்டு பண்ணைகளைப் போய் பார்த்துட்டு வந்தோம். உடனே அதற்க்கான வேலைகளை ஆரம்பிச்சுட்டோம்.

தலைச்சேரி கன்னி கலப்பு!
கேரளாவிலிருந்தும் பாண்டமங்கலத்திலிருந்தும் தலைச்சேரி ஆடுகளை வாங்கினோம். எட்டயபுரம், கோவில்பட்டி பக்கம் இருந்து கன்னி ஆடுகளையும் கிடாக்களையும் வாங்கினோம். அங்கங்க, நாலு போயர் பெட்டை, ஒரு போயர் கிடா, சிரோஹி ஆடு என்று வாங்கினதில் மொத்தம் இப்போ 350 ஆடுகள் இருக்கு. ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. நான்கு மாதமாகத்தான் விற்பனையை ஆரம்பிச்சுருக்கோம். எல்லா ஆடுகளும் சேர்ந்து உருவானதில் 160 கலப்பினக்குட்டிகளும் இப்போ கையில் இருக்கு.

உரத்துக்குப் பிரச்னையில்லை!
ஆட்டுப்பண்ணை ஆரம்பித்த பிறகு, தோட்டத்தோட உரத் தேவைக்கு பிரச்னையில்லை. ஆட்டுக்குட்டி விற்க்கிறது மூலமாக வருமானமும் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. இதுபோக வீட்டுத்தேவைக்காக மூன்று பசு மாடு இருக்கு. ஐம்பது மாடு இருந்த காலத்துலயும் சரி இப்போவும் சரி... எங்க தோட்டத்திலிருந்து நூறு மில்லி பாலைக்கூட விற்றதில்லை. பால், தயிர்னு கேட்டு வந்தால் சும்மாதான் கொடுப்போம். இன்னமும் குழந்தைகளுக்குக்காக இலவசமாகத்தான் கொடுத்துகிட்டுருக்கோம். எங்க தாத்தா, 'பாலை விற்க்கக் கூடாது’ங்கிற கொள்கையில் இருந்ததாலதான் நான் மாடுகளை வாங்காமல் ஆடுகளை வாங்கினேன். அதேமாதிரி ஆட்டுப்புழுக்கையையும் நாங்க விற்பதில்லை. எங்க தோட்டத்துக்கு மட்டும்தான் உபயோகப்படுத்துவோம். குட்டிகளை மட்டும்தான் விற்க்கிறோம்'' என்றார்.

செலவே இல்லாமல் தீவனம்!
''பத்து ஏக்கரில் தென்னைக்கு இடையில், கோ-4, கோ.எஃப்.எஸ்-29, வேலிமசால், கிளரிசீடியா எல்லாம் போட்டிருக்கேன். தீவனங்களை வெட்டுவதற்க்கு, அடர் தீவனம் தயாரிப்பதற்க்கு என்று எல்லாவற்றிறற்க்கும் மெஷின் இருக்கு. அடர் தீவனத்துக்காக தனியா சோளத்தட்டை, மக்காச்சோளமும் சாகுபடி செய்து எடுத்து வைத்துக்  கொள்வோம். அதோட தட்டைகள், தோட்டத்தில் அங்கங்க இருக்கும் புல், வேப்பிலை எல்லாத்தையும் வெட்டி ஆடுகளுக்குத் தீவனமாக கொடுத்துவிடுவோம். 'ஆடு வளர்க்கணும்' என்று முடிவு செய்த உடனேயே... தீவன உற்பத்தியை ஆரம்பித்துவிட்டோம். தென்னைக்கு ஆட்டுப்புழுக்கை போடும் போது  அந்த ஊட்டத்துலேயே தீவனமும் நன்றாக வளர்ந்துவிடுகிறது. இது, செலவில்லாமல் தீவனம் கிடைத்த மாதிரிதான்.

ஆட்டுப் பண்ணைக்காக 200 அடி நீளம், 22 அடி அகலத்துல நல்லா சிமெண்ட் பில்லர் போட்டு, தரையை விட்டு ஐந்தடி உயரத்தில் இரண்டு ஷெட் போட்டிருக்கிறோம். அதை 20 அடிக்கு 22 அடி என்கிற கணக்கில் தடுப்பு போட்டு 20 அறைகளாக பிரித்து வைத்திருக்கிறோம். கழிவுகள் கீழ விழுந்துடுற மாதிரி சின்னச்சின்ன இடைவெளி விட்டு பலகையால் அடிப்பகுதியை அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு அறைக்கு வெளியேவும் தீவனம் வைக்கறதுக்கான அமைப்பும், உள்ளே தண்ணீர் வைப்பதற்கான அமைப்பும் இருக்கு.
மூன்று வேளை தீவனம்!
''ஒவ்வொரு அறையிலயும் இருபத்தைந்திலிருந்து முப்பது ஆடுகள் வரைக்கும் விட்டிருக்கோம். தாய் ஆடுகளும், கிடாக்களும் எப்பவும் கொட்டில்லதான் இருக்கும். குட்டிகளை மட்டும் மேய்ச்சலுக்கு அனுப்புவோம். காலையில் ஒன்பது மணிக்கு ஒரு ஆட்டுக்கு நாலரைக் கிலோ என்ற கணக்கில் எல்லா பசுந்தீவனங்களையும் கலந்து சின்னச்சின்னதாக மெஷினில் வெட்டிக் கொடுத்துடுவோம். இப்படி கொடுக்கறதால், எதையும் கழிக்காமல் அவ்வளவையும் ஆடுகள் சாப்பிட்டுவிடும்.

மதியம் ஒரு மணிக்கு ஆட்டுக்கு 200 கிராம் என்ற கணக்கில் அடர் தீவனம் கொடுப்போம். திரும்ப சாயங்கலாம் நாலு மணிக்கு காலையில் கொடுத்த மாதிரியே பசுந்தீவனம் கொடுப்போம். காலையில் ஷெட்டை நன்றாக சுத்தப்படுத்திவிடுவோம். எப்பவும் சுத்தமான தண்ணீர் நிரப்பிக் கொண்டே இருப்போம். பசுந்தீவனம் அறுத்துட்டு வந்து நறுக்குறது, தீவனம் தயாரிக்கிறது, பராமரிப்பு எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் (2 ஆண்கள், 2 பெண்கள்) தினசரி வேலைக்கு வர்றாங்க. டாக்டருங்க சொல்ற மாதிரி தடுப்பூசி போட்டுவிடுவோம். அதேமாதிரி குடற்புழு நீக்கம் செய்திடுவோம்'' என்று பராமரிப்புக் குறிப்புகளை அழகாக அடுக்கினார்.

மாதத்துக்கு 50 குட்டிகள்!
வருமானம் பற்றி பேச ஆரம்பித்த வாசுதேவன், ''வெள்ளாடுகள் இரண்டு வருஷத்தில் மூன்று ஈத்து எடுக்கும். ஒரு ஈத்துக்கு இரண்டு குட்டிகள் கிடைக்கும். நான்கு மாதம் வரைக்கும் வளர்த்து விற்றுவிடுவோம். நன்றாக பால் குடித்த பிறகு கொஞ்ச நாள் மேய்ச்சலுக்கும் அனுப்புறோம். அதனால் எங்ககிட்ட வளர்ப்புக்கு வாங்கிட்டுப் போறவங்களுக்கும் ஆரோக்கியமான குட்டிங்கதான் கிடைக்கும்.
ஒரு குட்டி, மூன்றாயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து நான்காயிரத்து இரு நூறு ரூபாய் வரைக்கும் விலை போகிறது. நாங்கள் விற்பனையை ஆரம்பித்து நான்கு மாதம் ஆகிறது. மாதத்திற்க்கு நாற்பதைந்திலிருந்து ஐம்பது குட்டிகள் வரைக்கும் விற்க்கிறோம். சராசரியாக மாதத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

மாதம் 1 லட்சம் லாபம்!
ஆடுகளுக்கு அமைத்த கொட்டில்கள், தீவனம் தயாரிக்கும் மெஷின், வெட்டும் மெஷின், தாய் ஆடுகள், போக்குவரத்து என்று எல்லாவற்றையும் சேர்த்து 35 லட்ச ரூபாய் செலவாச்சு. சம்பளம், கரன்ட், தீவனம் எல்லாத்துக்கும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகிறது. இந்த ஒரு வருடத்தில் 40 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு பண்ணிட்டோம்.  மா, தென்னையில் கிடைக்கும் வருமானத்தை இதற்க்குதான் செலவு செய்துக்கிட்டிருந்தோம். இதுவரை சம்பாதித்த பணத்தையெல்லாம் புரட்டி இதில் போட்டாச்சு. இப்போதான் வருமானம் பார்க்க ஆரம்பிச்சுருக்கோம். இனி நிரந்தர முதலீடு எதுவும் கிடையாது. பராமரிப்புக்கும், தீவனத்துக்கும் மட்டும்தான் செலவு. அதை வைத்துப்  பாத்தால்... மாதம் 1 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். அடுத்த வருடம் குட்டிகளோட எண்ணிக்கை கூடலாம். அப்போது இன்னமும் வருமானமும் கூடும். போட்ட முதலீட்டைத் திரும்ப எடுக்கறதுக்கு இன்னும் இரண்டு வருடம் ஆகும். அதற்க்கு பிறகு எல்லாம் லாபம்தான். கண்டிப்பாக இரண்டு வருடத்தில் எடுத்துவிடுவேன்'' என்றார். இயற்கை முறையில் தென்னை மற்றும் மா ஆகியவற்றை சாகுபடி செய்து வரும் வாசுதேவன், அவற்றின் பராமரிப்பு மற்றும் விற்பனை பற்றியும் விரிவாகவே பேசினார்...

மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!
''27 அடி இடைவெளியில் தென்னை இருக்கு. முன்னாடி, வருடத்திற்க்கு இரண்டு முறை கொழிஞ்சியையும் தொழுவுரத்தையும் செழிம்பாக் கொடுத்துட்டு இருந்தோம். இப்போது, ஆட்டுப்புழுக்கையையும் கொழிஞ்சியையும் கொடுத்துக்கிட்டிருக்கோம். வேற எந்த உரமும் கொடுப்பதில்லை. அதேமாதிரி தேங்காயாக விற்பதில்லை. கொப்பரையாக்கி, வெள்ளகோவிலில் இருக்கும் எண்ணெய் மில்லுக்கு நேரடியாக அனுப்பி வைத்திடுவோம். அதனால், புரோக்கர் கமிஷன், மார்க்கெட் கமிஷன் என்ற எந்தச் செலவும் இல்லை. போக்குவரத்துச் செலவு மட்டும்தான். நாங்கள், கொப்பரை அனுப்புற அன்றைக்கு மார்க்கெட் விலை என்னவோ... அதை அப்படியே கொடுத்துடுவாங்க.

சிரட்டை 8,000 ரூபாய்... மட்டை 4,000 ரூபாய்.
வருடத்திற்க்கு ஆறு தடவை காய் பறிக்கலாம். ஆயிரம் தென்னை மரங்களிலிருந்து, ஒரு முறைக்கு 30 ஆயிரம் காய் கிடைக்கிறது. ஆறு முறைக்கும் சேர்த்து 1,80,000 காய் கிடைக்கும். அதை உரித்து உடைத்துக் காய வைத்து பருப்பு எடுத்தால்... 18 டன் கொப்பரையும், 18 டன் சிரட்டையும் கிடைக்கும். 1 டன் சிரட்டை, 8 ஆயிரம் ரூபாய்; 1 லாரி லோடு தேங்காய் மட்டை 4 ஆயிரம் ரூபாய் என்று விலை போகிறது. சிரட்டை, மட்டையில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே தேங்காய் வெட்டுக்கூலி, உரிக்கிற கூலி, பருப்பு எடுக்கற கூலி எல்லாத்தையும் சமாளிச்சுடலாம். இயற்கை விவசாயம் என்பதால் உரச் செலவும் கிடையாது. கொப்பரை விற்க்கிற பணம் அப்படியே லாபம். ஆகக்கூடி... ஆயிரம் தென்னை மரங்களிலிருந்து வருடத்திற்க்கு 10 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கிறது. அதேமாதிரி மட்டைகளைப் பொடியாக்கும் மெஷின் ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். தேவையான அளவிற்க்கு மட்டும் மட்டைகளைப் பொடியாக்கி மூடாக்கு போட்டுடுவோம். மீதி மட்டைகளைத்தான் விற்ப்போம்.

நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...
25 அடி இடைவெளியில் மா மரங்கள் இருக்கு. அல்போன்சா, பங்கனப்பள்ளி, கல்லாமை, செந்தூரா, கருங்குரங்குனு 500 மரங்கள் இருக்கு. இதுக்கும் வருடத்திற்க்கு இரண்டு முறை இயற்கை உரம் மட்டும்தான் கொடுக்கிறோம். பத்து ஏக்கரிலிருந்து கிடைக்கும் பழங்களை விற்பது மூலமாக வருடத்திற்க்கு 4 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இதையும் நாங்க மார்க்கெட்டுக்கு அனுப்புவதில்லை. நேரடியாக, கரூர்லயும், கோயம்புத்தூர்லயும் இருக்கற பழமுதிர்ச்சோலை நிலையம் கடைகளுக்குதான் அனுப்புறோம். போக்குவரத்து மட்டும்தான் செலவு. இதன் மூலமாக கூடுதல் லாபம் கிடைக்கிறது. இயற்கையாக விளைஞ்சது என்று சொல்லி அதிக விலைக்கு விற்க்கணும் என்றெல்லாம் நாங்க ஆசைப்படவில்லை. மார்க்கெட் விலை கிடைத்தாலே போதுமானது. செலவு குறையறப்போது, தானா லாபம் கூடிடுதுல்ல'' என்றார் வாசுதேவன், மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்றவராக!
தொடர்புக்குவாசுதேவன், செல்போன்: 94433-29300.
பீர்முகமது, செல்போன்: 94433-21882.

10 மாதங்களில் அறுவடை! ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!

விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்.திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது. 

பசுமை விகடன்தான் வாத்தியார்

முதல் புத்தகம் வெளியான நாளிலிருந்தே இவர், தீவிரமான பசுமை விகடன் வாசகர் ஆகிவிட்டதாகவும் அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமாக சேர்த்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார். விவசாயத்தில் வரும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வாத்தியார், பசுமை விகடன்தான் என்கிறார். இப்பொழுது இவருடைய நண்பர் செல்லப்பாண்டியன், வெளியூர் போய் வரும் போது, மறக்காமல் பசுமை விகடன் வாங்கிவந்துவிடுவார் என்று உற்சாகமாக ஆரம்பித்த மாரிமுத்து.

சிறிய இடமே போதும்
ஒரு ஏக்கரில் அம்பை பதினாறு ரக நெல்லும், ஒரு ஏக்கரில் ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிகோம். இது போக அரை ஏக்கரில் 21 தென்னை இருக்கிறது. எல்லாம் ஏழு வயதான மரங்கள்.  நடவு செய்யும்போதே 25 அடி இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். 6 சென்ட் குளம், 10 மாதம், 30 ஆயிரம் என்று விறு விறு லாபம் தரும் விரால் மீன் என்று சமீபத்தில் பசுமை விகடனில்  (10.11.10 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்ததும்தான், சின்ன இடத்திலேயே இவ்வளவு லாபம் கிடைக்கும்போது  அரை ஏக்கர் இருக்கின்ற தென்னைக்கு இடையில் ஏன் விரால் மீன்கள் வளர்க்கக் கூடாது என்று  நண்பர் செல்லப்பாண்டியனிடம்  கூறி அவரும் இதில் ஆர்வமானதும் இரண்டு பேரும் சேர்ந்து விரால் வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.சேவியர் கல்லூரியின் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்துக்குச் சென்று, விரால் மீன் வளர்ப்புப் பற்றி தெரிந்து கொண்டு, உடனடியாக வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது பத்து மாதம் ஓடிவிட்டது. மீனெல்லாம் விற்பனைக்குத் தயாரா இருக்கிறது என்றபடியே ஒரு மீனைப் பிடித்துக் காட்டிவிட்டு, விரால் மீன் வளர்ப்பு முறைகளை அடுக்க ஆரம்பித்தார், மாரிமுத்து.

நான்கடி உயரத்துக்குத் தண்ணீர்
தென்னைக்கு இடையில், 150 அடி நீளம், 18 அடி அகலம், 5 அடி ஆழத்தில் தனித்தனியாக இரண்டு குளங்கள் வெட்டியிருக்கிறார்கள். இவர்கள் தோட்டம் முழுக்கவே களிமண் பூமி என்பதால் வண்டல் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமில்லை. நாலடி உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஒரு மாத வயதுள்ள விரால் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனர். ஒரு குளத்துக்கு ஐயாயிரம் குஞ்சுகள் என்று இரண்டு குளத்திலும் பத்தாயிரம் குஞ்சுகள். 

நிழல் கொடுக்க தாமரை
மீன் குஞ்சுகளை, பறவைகளிடமிருந்து காப்பாத்தறதுக்காக குளத்துக்கு மேல் வலையைக் கட்டியிருக்கிறார்கள். தென்னை மரங்களோட நிழல் கிடைப்பதால், மீன்களுக்கு வெயிலின் பாதிப்பு அதிகளவில் இருக்காது. கூடுதல் பாதுகாப்புக்கு, தாமரையையும் படர விட்டிருக்கிறார்கள்.

கொழுக்க வைக்கும் கொழிஞ்சி

இரண்டு மாத வயது வரைக்கும், இரண்டு குளத்தில் இருக்கின்ற மீன்களுக்கும் சேர்த்து, ஒரு நாளைக்கு மூணு கிலோ கடலைப்புண்ணாக்கு போட்டுள்ளனர். இதை இரண்டாக பிரித்து காலையும் மாலையும் போடலாம். மூன்றாவது மாதத்துக்கு மேல் கொழிஞ்சி இலையை வெட்டி, சின்னச்சின்னக் கட்டுகளாக கட்டி குளத்துக்குள் போட்டுள்ளனர். அது தண்ணீரில் அழுகியதும், அதிலிருந்து நிறைய புழுக்கள் உருவாகும். அதை மீன்கள் நன்றாக சாப்பிட்டு கொழுத்தது. இரண்டு குளத்துக்கும் சேர்த்து, ஒரு மாதத்துக்கு ஒரு டன் கொழிஞ்சி இலை தேவைப்பட்டதாக கூறுகின்றனர்.

ஆறு மாதத்துக்கு மேல் கோழிக்கழிவு
ஆறாவது மாதத்துக்கு மேல் மீன்களுக்குக் கோழிக்கழிவுதான் தீவனம். கோழிக்குடல், கறி என்று கறிக்கடையில் வீணாகும் கழிவுகளை வாங்கி வந்து, வேக வைத்து குளத்துக்குள் ஆங்காங்கே போட்டுள்ளனர். இரண்டு குளத்துக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு நாப்பது கிலோ கோழிக்கழிவு போடுகிறார்கள். அதனால் மீன்கள் நல்ல எடைக்கு வந்திருக்கின்றன.

பற்றாக்குறைக்கு ஜிலேபி மீன்கள் 
1,000 விராலுக்கு 25 ஜிலேபி மீன் என்கிற கணக்கிலேயும் மீன்கள் குளத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த ஜிலேபி மீன்கள் அடிக்கடி குஞ்சு பொரித்துக் கொண்டே இருக்கும். நாம் கொடுக்கும் உணவு பற்றாக்குறைக்கு இந்தக் குஞ்சுகளை விரால் மீன்கள் பிடித்து சாப்பிட்டுக்கொள்ளும்.

நோய்கள் தாக்காது
விரால் மீனைப் பெரும்பாலும் எந்த நோயும் தாக்குவதில்லை. எப்பொழுதாவது அம்மை மாதிரியான கொப்பளம் வரும். அந்த சமயத்தில் மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவினால் சரியாகிவிடும். வயலுக்கான பாசன நீர், பம்ப் செட்டிலிருந்து முதலில் மீன் குளத்தில்தான் விழும். அதற்குப் பிறகுதான் வயலுக்குப் பாயும். அதனால் இந்தத் தண்ணீரே வயலுக்கு நல்ல உரமாகிறது என்ற மாரியப்பன், நிறைவாக விற்பனை வாய்ப்புகள் பற்றிச் சொன்னார்.

தேடி வரும் சந்தை வாய்ப்பு
மீனைப் பிடித்து, சோதனைக்காக எடை போட்டுப் பார்த்தப்போது குறைந்தபட்சமாக முக்கால் கிலோவும் அதிகபட்சமாக ஒன்றே கால் கிலோ வரைக்கும் இருந்தது. 10 ஆயிரம் குஞ்சுகள் விட்டதில் இப்பொழுது, 8 ஆயிரம் மீன் வரைக்கும் குளத்துக்குள் இருக்கும் என்கிறார். பாதிக்குப் பாதி போனாலும், எப்படியும் 5 ஆயிரம் மீன்களுக்குக் குறையாது. தமிழ்நாட்டில், தேவையான அளவுக்கு விரால் மீன் உற்பத்தி இல்லாததால், வியாபாரிகளே பண்ணைக்குத் தேடி வந்து கேட்டுக்கிறார்கள். ஒரு மீன், முக்கால் கிலோ என்று வைத்துக் கொண்டாலும், பிடிக்கும்பொழுது மொத்தமாக, 3 ஆயிரத்து 750 கிலோ மீன் கிடைக்கும். மொத்த விலையில் ஒரு கிலோ 250 ரூபாய் என்று போகிறது. அதன்படி பார்த்தால், இரண்டு குளத்திலேயும் இருக்கின்ற மீன்கள் மூலமாக, 9 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக, எப்படி பாத்தாலும் ஆறு லட்ச ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும். இந்த லாபம் பசுமை விகடன் எங்களுக்குக் கொடுத்த பரிசு என்றபடி நன்றிப் பெருக்கோடு விடை கொடுத்தார், மாரிமுத்து.

தொடர்புக்கு
மாரிமுத்து,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக