நலமே செய்யும் பண்பாளன் நாயன் அல்லாஹ் திருப்பெயரால்....
மாணவர்க்கான மார்க்கக் கல்வி!உலகத் தரத்திலானஅரிய நூல்கள்!! ஆங்கில மொழியில்!!உலகக் கல்விக்கு எவ்வளவுதான் உயர்ந்த இடம் கொடுத்துப் பெரும் பொருள் செலவழித்து நம் மக்களைப் படிக்க வைத்தாலும், நம் மக்கள் மார்க்கக் கல்வியைப் பெற வேண்டுமே என்று எண்ணி ஏங்கும் தமிழ் முஸ்லிம்கள் உலகெங்கும் இருந்துவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே!அவர்களுக்கெல்லாம் பயன்படக்கூடிய ஒரு கல்வி ஆலோசனையாக இந்த மின்னஞ்சலை உள்ளன்போடும் பணிவன்போடும் சமர்ப்பிக்கிறோம்.இக்காலத்தில் பெரும்பாலான பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியே பயில்வதால் அவர்களுக்கெல்லாம் பயன்படக் கூடிய இருவகைப் பாட நூல்களை இங்கு அறிமுகப் படுத்த விரும்புகிறோம்.அவையாவன:1.மழலையர் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளிவரை பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் தாமே விரும்பிக் கற்கும் விதத்தில் அவரவர் வயதிற்கேற்ப மார்க்க அறிவையும் உணர்வையும் பேணுதலையும் பெறத்தக்க வகையில் அழகிய முறையில் நுட்பமாக உளவியல் கண்ணோட்டத்தோடு வடிவமைக்கப் பட்ட ஆங்கிலப் பாட நூல்கள்.1.English Poetry Books:Rhythm 1 to 9 parts2.English Prose Books:Basics of Islam:(A)Islamic Primer,(B)Pre-Primer,(C)Basics of Islam 1 to 8 volumes2.உலக வரலாறு, உலகப் படைப்பிலிருந்து எப்படி இறைவனோடும் மார்க்கத்தோடும் தொடர்புடையதாக உள்ளது என்பதை அறிவியலோடும்,ஆதாரபூர்வமான வரலாற்றோடும்,இஸ்லாம் மார்க்கத்தோடும் முரண்படாத முறையில் புதிய கண்ணோட்டத்தோடு எழுதப்பட்டுள்ள அருமையான நூல் வரிசை:Stories of the World 1 to 6 volumesஇவை இருக்க, நம் பெண் மக்களுக்கென்றே பிரத்யேகமாக எழுதப் பட்டுள்ள மற்றொரு நூல்:Women and Islamic Lawஉண்மையில் இந்த நூல்களெல்லாம் மெத்தப் படித்த மேதைகள் கூடப் படித்து இன்புறும் தரத்தில் உள்ளவை;உலகின் பல நாடுகளில் உள்ள இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்குப் பாட நூல்களாக பல ஆண்டுகளாக இருந்து வருபவை.இளமையிலிருந்து வகுப்புக்கேற்ற முறையில் படிப்படியாக நம் பிள்ளைகள் தம் விருப்பத்தின் பேரில் படித்து வந்தால் கூட அவர்கள் தம்முடைய பதின் பருவம்(teen age) முடிவதற்குள் இளம் மார்க்க அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதி.இந்த நூல்களையெல்லாம் ஒருமுறை கண்ணால் பார்த்துப் புரட்டினால்கூட இவ்வளவு அருமையான நூல்களை இத்தனை நாட்களாக நம் மக்களுக்கு வாங்கித் தராமல் இருந்துவிட்டோமே என்று ஏங்கச் செய்ய வல்லவை!இந்த அரிய நூல்களைப் பார்க்கவோ,வாங்கிப் படிக்கவோ, நம் மாணவச் செல்வங்களுக்குக் கற்பிக்கவோ விரும்பும் மார்க்க ஆர்வலர்கள் அன்புகூர்ந்து தங்களுடைய முழுமையான தொடர்பு விவரங்களுடன் கீழ்க் கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக